கடந்த வாரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இன்று மதியம் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெறாவிட்டால்,
நாளை முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தமக்கு வழங்க வேண்டும் எனக் கோரி, 72 சுகாதார தொழிற்சங்கங்கள் கடந்த 1ஆம் திகதி திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.
சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பு. இன்று முக்கிய கலந்துரையாடல் கடந்த வாரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.இன்று மதியம் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெறாவிட்டால்,நாளை முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை தமக்கு வழங்க வேண்டும் எனக் கோரி, 72 சுகாதார தொழிற்சங்கங்கள் கடந்த 1ஆம் திகதி திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.