• Mar 19 2025

தீர்வு இல்லையேல் நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை - சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

Chithra / Mar 19th 2025, 1:22 pm
image

 

சுகாதார தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்தது.  

பாதீட்டின் ஊடாக தங்களுக்கான கொடுப்பனவுகளை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வு கோரி 18 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று காலை 7 மணிமுதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன. 

கலந்துரையாடல் மூலம் தங்களது பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முற்பட்ட போதிலும் அதற்குரிய தீர்வு கிடைக்கவில்லை எனச் சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் தங்களது பிரச்சினைகளுக்குரிய தீர்வு கிடைக்கவில்லையாயின் சகல சுகாதார தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்வு இல்லையேல் நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை - சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை  சுகாதார தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்தது.  பாதீட்டின் ஊடாக தங்களுக்கான கொடுப்பனவுகளை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வு கோரி 18 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று காலை 7 மணிமுதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன. கலந்துரையாடல் மூலம் தங்களது பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முற்பட்ட போதிலும் அதற்குரிய தீர்வு கிடைக்கவில்லை எனச் சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தங்களது பிரச்சினைகளுக்குரிய தீர்வு கிடைக்கவில்லையாயின் சகல சுகாதார தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement