யாழ்ப்பாணம் கலைவாணி விளையாட்டு அரங்கில் "ஆரோக்கியமான வாழ்க்கை ஆரோக்கியமான தேர்வுகள்" என்னும் தொனிப்பொருளில் சுகாதார கண்காட்சியும் உள்ளூர் உற்பத்தி விற்பனையும் நேற்று (20.12.2023 ) Save a Life நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது.
இதில் நீரிழிவுக்கழகம், புற்றுநோய் பிரிவினர் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் இங்கு நீரிழிவுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இலவசமாக நீரிழிவுக்கு கைநூல் ஒன்றும் வழங்கப்பட்டது.
மேலும் புற்றுநோய் மாதவிடாய், போசாக்கான உணவு, சூழல் பாதுகாப்பு போன்றவை தொடர்பான விழிப்பூட்டல்களும், உள்ளூர் உற்பத்தி பொருட்களின் விற்பனையும் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் இடம் பெற்ற "ஆரோக்கியமான வாழ்க்கை ஆரோக்கியமான தேர்வுகள்" கண்காட்சி.samugammedia யாழ்ப்பாணம் கலைவாணி விளையாட்டு அரங்கில் "ஆரோக்கியமான வாழ்க்கை ஆரோக்கியமான தேர்வுகள்" என்னும் தொனிப்பொருளில் சுகாதார கண்காட்சியும் உள்ளூர் உற்பத்தி விற்பனையும் நேற்று (20.12.2023 ) Save a Life நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது. இதில் நீரிழிவுக்கழகம், புற்றுநோய் பிரிவினர் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் இங்கு நீரிழிவுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இலவசமாக நீரிழிவுக்கு கைநூல் ஒன்றும் வழங்கப்பட்டது. மேலும் புற்றுநோய் மாதவிடாய், போசாக்கான உணவு, சூழல் பாதுகாப்பு போன்றவை தொடர்பான விழிப்பூட்டல்களும், உள்ளூர் உற்பத்தி பொருட்களின் விற்பனையும் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.