• Sep 30 2026

யாழை உலுக்கிய சோகம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு அதிகாலை நடந்த கோர சம்பவம்

Chithra / Sep 29th 2026, 12:05 pm
image


 

யாழ்ப்பாணம் – மன்னார் ஏ35 பிரதான வீதியின் அறுகுவெளிப் பகுதியில் இன்று (29) காலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 


மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 


இந்த விபத்து காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் மன்னார் – வட்டக்கண்டல் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய எமிலியானுஸ் அன்ரனி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அவர் பூநகரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழை உலுக்கிய சோகம்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு அதிகாலை நடந்த கோர சம்பவம்  யாழ்ப்பாணம் – மன்னார் ஏ35 பிரதான வீதியின் அறுகுவெளிப் பகுதியில் இன்று (29) காலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மன்னார் – வட்டக்கண்டல் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய எமிலியானுஸ் அன்ரனி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர் பூநகரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement