நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை கினிகத்தேன, அம்பகமுவ, நோட்டன், மஸ்கெலியா, ஹட்டன், நல்லதண்ணி, பொகவந்தலாவ, நோர்வூட், கொட்டகலை, லிந்துல, நானுஓயா மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
இதன் காரணமாக, வாகன சாரதிகள் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு, மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவனொளிபாதமலை (ஸ்ரீபாத) யாத்திரை பருவகாலம் நிறைவடையவுள்ள நிலையில், தற்போதும் அதிகளவிலான உள்நாட்டு, வெளிநாட்டு யாத்திரிகர்கள் வருகை தந்துவண்ணமுள்ளனர். எனினும், தொடர் மழையினால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அங்குள்ள பிரதான கங்கைகளில் யாத்திரிகர்கள் யாரும் நீராட வேண்டாம் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
தொடர் மழையினால் மத்திய மலைநாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள், பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மரக்கறிகளின் விலைகள் வான்முட்ட உயர்ந்துள்ளன.
இதேவேளை களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
எனவே, இந்த அபாயகரமான பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் மலைநாட்டுப் பாதைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கனமழை, கடும் பனிமூட்டம்; நீர்நிலைகளில் நீராட வேண்டாம் மண்சரிவு அபாயம் தீவிரம் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.இதேவேளை கினிகத்தேன, அம்பகமுவ, நோட்டன், மஸ்கெலியா, ஹட்டன், நல்லதண்ணி, பொகவந்தலாவ, நோர்வூட், கொட்டகலை, லிந்துல, நானுஓயா மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக, வாகன சாரதிகள் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு, மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.சிவனொளிபாதமலை (ஸ்ரீபாத) யாத்திரை பருவகாலம் நிறைவடையவுள்ள நிலையில், தற்போதும் அதிகளவிலான உள்நாட்டு, வெளிநாட்டு யாத்திரிகர்கள் வருகை தந்துவண்ணமுள்ளனர். எனினும், தொடர் மழையினால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அங்குள்ள பிரதான கங்கைகளில் யாத்திரிகர்கள் யாரும் நீராட வேண்டாம் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.தொடர் மழையினால் மத்திய மலைநாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள், பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மரக்கறிகளின் விலைகள் வான்முட்ட உயர்ந்துள்ளன.இதேவேளை களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.எனவே, இந்த அபாயகரமான பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் மலைநாட்டுப் பாதைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.