கொழும்பு மாவட்டத்தில் நேற்று (06) காலை 8.30 மணி முதல் இன்று காலை 7.00 மணி வரை 162.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தவிர, வல்லல்லாவிட்ட, ஹொரணை, நெலுவ மற்றும் உடுகம ஆகிய இடங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் நாட்டின் வானிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு நகரில் சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கட்டுவை பிரதேசத்தில் புவக்வத்த பகுதியில் சிறிய பாலத்தின் மேலாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக பிரதேசத்தின் சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் வாழும் மக்கள் உறவினர் நண்பர்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
பெரியமுல்லை பிரதேசத்தில் தெனியாயவத்த , இறப்பர் வத்த, கோமஸ் வத்தை உட்பட பல தாழ்நில பிரதேசங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அதிக மழை வீழ்ச்சி பதிவு - வெள்ளத்தில் மூழ்கிய பிரதேசங்கள் கொழும்பு மாவட்டத்தில் நேற்று (06) காலை 8.30 மணி முதல் இன்று காலை 7.00 மணி வரை 162.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தவிர, வல்லல்லாவிட்ட, ஹொரணை, நெலுவ மற்றும் உடுகம ஆகிய இடங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதற்கிடையில், அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் நாட்டின் வானிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு நகரில் சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கட்டுவை பிரதேசத்தில் புவக்வத்த பகுதியில் சிறிய பாலத்தின் மேலாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக பிரதேசத்தின் சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் வாழும் மக்கள் உறவினர் நண்பர்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர். பெரியமுல்லை பிரதேசத்தில் தெனியாயவத்த , இறப்பர் வத்த, கோமஸ் வத்தை உட்பட பல தாழ்நில பிரதேசங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.