சீரற்ற வானிலையால் நீர்ப்பாசனத் திணைக்களம் திடீர் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மூன்று உலங்கு வானுர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
அவசர நிலை தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் இந்த உலங்கு வானுர்திகள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படும் என விமானப்படை ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க கூறியுள்ளார்.
கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் ஹிகுராக்கொட விமானப்படை தளங்களில் இந்த உலங்கு வானுர்திகள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்காக இரண்டு பெல் 212 விமானங்களும், எம்ஐ 17 விமானமும் தயார் செய்யப்பட்டுள்ளன.
பேரிடர் மேலாண்மை மையத்தின் அறிவிப்பின் பேரில் மீட்பு பணிகளுக்கு விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில். விமானப்படையின் விசேட அறிவிப்பு சீரற்ற வானிலையால் நீர்ப்பாசனத் திணைக்களம் திடீர் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மூன்று உலங்கு வானுர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.அவசர நிலை தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் இந்த உலங்கு வானுர்திகள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படும் என விமானப்படை ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க கூறியுள்ளார்.கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் ஹிகுராக்கொட விமானப்படை தளங்களில் இந்த உலங்கு வானுர்திகள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதற்காக இரண்டு பெல் 212 விமானங்களும், எம்ஐ 17 விமானமும் தயார் செய்யப்பட்டுள்ளன.பேரிடர் மேலாண்மை மையத்தின் அறிவிப்பின் பேரில் மீட்பு பணிகளுக்கு விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.