கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ‘கிரீன் சேனல்’ ஊடாக சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருட்களை கடத்திச் செல்ல முயன்ற இரு தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இன்று (08) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் TG-307 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 23 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் ‘கிரீன் சேனல்’ ஊடாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது, அவர்களது பயணப் பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, 16 விட்டமின் கொள்கலன்களுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கறுப்பு திராட்சைத் துகள்களைப் போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்பட்டு பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 641 கிராம் ‘ஹஷீஷ்’ போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் தாய்லாந்து பிரஜைகள் எனவும், அவர்கள் இறைச்சி வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுங்க அதிகாரிகளின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விட்டமின் கொள்கலன்களில் மறைத்து ‘குஷ்’ கடத்தல்; கட்டுநாயக்கவில் சிக்கிய வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ‘கிரீன் சேனல்’ ஊடாக சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருட்களை கடத்திச் செல்ல முயன்ற இரு தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் இன்று (08) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் TG-307 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 23 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் ‘கிரீன் சேனல்’ ஊடாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது, அவர்களது பயணப் பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.இதன்போது, 16 விட்டமின் கொள்கலன்களுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும், கறுப்பு திராட்சைத் துகள்களைப் போன்ற தோற்றத்தில் தயாரிக்கப்பட்டு பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 641 கிராம் ‘ஹஷீஷ்’ போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரும் தாய்லாந்து பிரஜைகள் எனவும், அவர்கள் இறைச்சி வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சுங்க அதிகாரிகளின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.