• Nov 24 2024

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்த்த உயர்தர மாணவன்! தென்னிலங்கையில் பயங்கரம்

Chithra / Jun 25th 2024, 4:51 pm
image

 

உயர்தர  மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த கே.எம்.பி.ஆர்.ஜி. குலசேகர என்ற 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வேலைக்குச் செல்லும் தனது தாயாரை வணங்கி, பின்னர் அறைக்குச் சென்ற குறித்த மாணவன், 

அறையின் கதவைப் பூட்டிவிட்டு  துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை ஹெத்கால பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணிதப்பிரிவில் பயின்று வந்துள்ளார்.

இவரது தாய் ஆசிரியை எனவும், தந்தை வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது தனியார் நிறுவன ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சகோதரன் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், சகோதரி குருநாகல் போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராகவும் கடமையாற்றுகின்றனர்.

தந்தை மறைத்து வைத்திந்த அவரது  துப்பாக்கியை கண்டு பிடித்த மாணவன்,  துப்பாக்கியால் சுட்டுத் உயிரிழந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பளை சர்வதேச பாடசாலையில் கல்வி பயின்ற இந்த மாணவன், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 08 ஏ, B சித்தியுடன், உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இணைந்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னதாகவே உயர்தரத்துக்குத் தயாராகிய இவர், பரீட்சை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மாணவன் பெரும்பாலும் இணையவழியில் பாடங்களைச் கற்றுள்ளதோடு, கணினி மற்றும் கைத்தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே அவர் இணையவழி விளையாட்டிற்கு அடிமையாகி, தேர்வை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை ஹெத்கால பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிர்மாய்த்த உயர்தர மாணவன் தென்னிலங்கையில் பயங்கரம்  உயர்தர  மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த கே.எம்.பி.ஆர்.ஜி. குலசேகர என்ற 18 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.வேலைக்குச் செல்லும் தனது தாயாரை வணங்கி, பின்னர் அறைக்குச் சென்ற குறித்த மாணவன், அறையின் கதவைப் பூட்டிவிட்டு  துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை ஹெத்கால பொலிஸார் தெரிவித்தனர்.இவர் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணிதப்பிரிவில் பயின்று வந்துள்ளார்.இவரது தாய் ஆசிரியை எனவும், தந்தை வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது தனியார் நிறுவன ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.சகோதரன் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், சகோதரி குருநாகல் போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராகவும் கடமையாற்றுகின்றனர்.தந்தை மறைத்து வைத்திந்த அவரது  துப்பாக்கியை கண்டு பிடித்த மாணவன்,  துப்பாக்கியால் சுட்டுத் உயிரிழந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கம்பளை சர்வதேச பாடசாலையில் கல்வி பயின்ற இந்த மாணவன், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 08 ஏ, B சித்தியுடன், உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இணைந்துள்ளார்.ஒரு வருடத்திற்கு முன்னதாகவே உயர்தரத்துக்குத் தயாராகிய இவர், பரீட்சை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்த மாணவன் பெரும்பாலும் இணையவழியில் பாடங்களைச் கற்றுள்ளதோடு, கணினி மற்றும் கைத்தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.எனவே அவர் இணையவழி விளையாட்டிற்கு அடிமையாகி, தேர்வை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை ஹெத்கால பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement