• Nov 26 2024

இந்திய மீனவர்களின் நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தம்..!samugammedia

Tharun / Feb 20th 2024, 7:36 pm
image

இந்திய மீனவர்கள் தங்களது நடை பயணத்தை ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மீனவர்களை விடுதலை செய்யும் வரை மீனவர் ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழாவை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

தமிழகத்தின் - ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 3ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்களையும் இரண்டு விசைப்படகையும் எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் வழக்கு கடந்த 16ஆம் தேதி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அதில் 20 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டதுடன் இரண்டு படகு ஓட்டுனருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ஒரு மீனவர் இரண்டாவது முறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். 

இலங்கை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இன்று காலை ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் மூன்று நாள் தொடர் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரடம் படகு உரிமம், அடையாள அட்டை, உள்ளிட்டவைகளை ஒப்படைப்பதாக போவதாக புறப்பட்டு 11 கிலோ மீட்டர் தூரம் நடந்து பாம்பன் ஊராட்சி மன்ற அலிவலகம்  அருகே சென்று கொண்டிருந்தபோது மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மீனவர்களின் கோரிக்கைகளை பெறுவதற்காக பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு  வந்து மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சு வார்த்தையில் இலங்கை நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மேல்முறையீடு செய்திருப்பதாகவும் விரைவில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய மத்திய மாநில அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் உறுதியளித்தார். 

இந்த உறுதியை ஏற்றபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேருக்கு வரும் 22ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளதையடுத்து அதில் மீனவர்கள் அனைவரும் நிபந்தனைகள் இல்லாமல் விடுதலை செய்யப்படாவிட்டீல் மீனவர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நடை பயணம் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தொடரும் என தெரிவித்தனர்.

மீனவர்களின் நடை பயணம் காரணமாக மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

 மேலும் நடை பயணம் செல்லும் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தாமல் இருப்பதற்காக ராமேஸ்வரம் மரைன் காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் மண்டபம், பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மரைன் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்திய மீனவர்களின் நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தம்.samugammedia இந்திய மீனவர்கள் தங்களது நடை பயணத்தை ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மீனவர்களை விடுதலை செய்யும் வரை மீனவர் ராமேஸ்வரம் மீனவர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழாவை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தமிழகத்தின் - ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 3ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்களையும் இரண்டு விசைப்படகையும் எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் வழக்கு கடந்த 16ஆம் தேதி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அதில் 20 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டதுடன் இரண்டு படகு ஓட்டுனருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ஒரு மீனவர் இரண்டாவது முறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இலங்கை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இன்று காலை ராமேஸ்வரம் மீன் பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து மீனவர்கள் மூன்று நாள் தொடர் நடைபயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியரடம் படகு உரிமம், அடையாள அட்டை, உள்ளிட்டவைகளை ஒப்படைப்பதாக போவதாக புறப்பட்டு 11 கிலோ மீட்டர் தூரம் நடந்து பாம்பன் ஊராட்சி மன்ற அலிவலகம்  அருகே சென்று கொண்டிருந்தபோது மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.பின்னர் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மீனவர்களின் கோரிக்கைகளை பெறுவதற்காக பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு  வந்து மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சு வார்த்தையில் இலங்கை நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு மேல்முறையீடு செய்திருப்பதாகவும் விரைவில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய மத்திய மாநில அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் உறுதியளித்தார். இந்த உறுதியை ஏற்றபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.மேலும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேருக்கு வரும் 22ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளதையடுத்து அதில் மீனவர்கள் அனைவரும் நிபந்தனைகள் இல்லாமல் விடுதலை செய்யப்படாவிட்டீல் மீனவர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நடை பயணம் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தொடரும் என தெரிவித்தனர்.மீனவர்களின் நடை பயணம் காரணமாக மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் நடை பயணம் செல்லும் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தாமல் இருப்பதற்காக ராமேஸ்வரம் மரைன் காவல் ஆய்வாளர் உத்தரவின் பேரில் மண்டபம், பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மரைன் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement