• Jun 13 2026

ஒலுவில் அல் - ஹம்றாவில் கடெற் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிப்பு!

Ziya / Jun 12th 2026, 12:00 pm
image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் 2024 ம் ஆண்டு முதல்  அமுலாகும் வகையில் “கெப்டன்" (Captain) ஆக பதவி உயர்வு பெற்றுள்ள ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் கெப்டன் ஏ.எம்.எம்.கியாஸ் மற்றும்   தேசிய கடெற் முகாமில் பங்குபற்றிய மாணவர்களும் சின்னம் சூட்டி சான்றிதழ் வழங்கி 

பாடசாலை சமூகத்தினாலும் கடெற் மாணவர்களின் பெற்றோர்களாலும் கௌரவிக்கப்பட்டார்கள். 


கடந்த 2025/10/24 ம் திகதி அன்று வெளியான இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமான பத்திரிகை இலக்கம் 2460 மூலம்  ஜனாதிபதி அனுமதியுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் 2024 ம் ஆண்டு முதல்  அமுலாகும் வகையில்   ''கெப்டன்" (Captain) ஆக இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.   


அவரோடு கடெற் மாணவர்களுக்கு பயிற்சியளித்த பொலிஸ் சார்ஜன் சுதர்சன்  கௌரவிக்கப்பட்டதோடு,பாடசாலை கடற்பிரிவு மாணவன் ஏ.என்.சறாபத் இஸ்னி (Warrent officer - II) நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.


கல்லூரியின் அதிபர் அல்-ஹாஜ் ஏ.எல். அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான எம்.ஏ. கமறுன்னிஸா  ஜே.வஹாப்தீன், உதவி அதிபர் எம்.ஐ.பழீலுள்ளா மற்றும் ஆசிரியர்களும் கடெற் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.


இந்த விழாவினை அல்-ஹம்றா காடெற்பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாக ஒய்வு பெற்ற மருந்தாளர், எம்.சி.எம்.மஸ்கூத் தலைமை தாங்கி நடாத்தியமை  குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் அல் - ஹம்றாவில் கடெற் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் 2024 ம் ஆண்டு முதல்  அமுலாகும் வகையில் “கெப்டன்" (Captain) ஆக பதவி உயர்வு பெற்றுள்ள ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் கெப்டன் ஏ.எம்.எம்.கியாஸ் மற்றும்   தேசிய கடெற் முகாமில் பங்குபற்றிய மாணவர்களும் சின்னம் சூட்டி சான்றிதழ் வழங்கி பாடசாலை சமூகத்தினாலும் கடெற் மாணவர்களின் பெற்றோர்களாலும் கௌரவிக்கப்பட்டார்கள். கடந்த 2025/10/24 ம் திகதி அன்று வெளியான இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமான பத்திரிகை இலக்கம் 2460 மூலம்  ஜனாதிபதி அனுமதியுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் 2024 ம் ஆண்டு முதல்  அமுலாகும் வகையில்   ''கெப்டன்" (Captain) ஆக இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.   அவரோடு கடெற் மாணவர்களுக்கு பயிற்சியளித்த பொலிஸ் சார்ஜன் சுதர்சன்  கௌரவிக்கப்பட்டதோடு,பாடசாலை கடற்பிரிவு மாணவன் ஏ.என்.சறாபத் இஸ்னி (Warrent officer - II) நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.கல்லூரியின் அதிபர் அல்-ஹாஜ் ஏ.எல். அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான எம்.ஏ. கமறுன்னிஸா  ஜே.வஹாப்தீன், உதவி அதிபர் எம்.ஐ.பழீலுள்ளா மற்றும் ஆசிரியர்களும் கடெற் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.இந்த விழாவினை அல்-ஹம்றா காடெற்பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாக ஒய்வு பெற்ற மருந்தாளர், எம்.சி.எம்.மஸ்கூத் தலைமை தாங்கி நடாத்தியமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement