• Dec 09 2024

மன்னாரில் கோர விபத்து..! சுக்குநூறாக சிதறிய மோட்டார் சைக்கிள்கள்- மூவர் படுகாயம்..!

Sharmi / Aug 27th 2024, 9:12 pm
image

மன்னாரில் இன்று(27) மாலை இடம்பெற்ற விபத்தில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார்- மதவாச்சி பிரதான வீதி ,உயிலங்குளம் பகுதியில் நேர் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனத்தில் பயணித்தவர்கள் இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களை உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரும் மாந்தை மேற்கு பகுதியை சேர்ந்த ஒருவரும் என்று தெரியவருகிறது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மன்னாரில் கோர விபத்து. சுக்குநூறாக சிதறிய மோட்டார் சைக்கிள்கள்- மூவர் படுகாயம். மன்னாரில் இன்று(27) மாலை இடம்பெற்ற விபத்தில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மன்னார்- மதவாச்சி பிரதான வீதி ,உயிலங்குளம் பகுதியில் நேர் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனத்தில் பயணித்தவர்கள் இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்தவர்களை உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.விபத்தில் காயமடைந்தவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரும் மாந்தை மேற்கு பகுதியை சேர்ந்த ஒருவரும் என்று தெரியவருகிறது.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement