• May 27 2026

ஹொரணையில் கோர விபத்து; இளம் தாய் சாவு! சிறுமி உட்பட இருவர்வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Aug 25th 2024, 7:31 am
image


ஹொரணை - பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹொரணை வடக்கு உடுவையில் வசித்து வந்த கே. ஜி கிம்ஹானி 26 வயதான ஒரு குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மூன்று வயது சிறுமி மற்றும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூவரும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது  ஜீப் ரக வாகனம் ஒன்று பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு திரும்பும் சந்திக்கு அருகில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் ஜீப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஹொரணையில் கோர விபத்து; இளம் தாய் சாவு சிறுமி உட்பட இருவர்வைத்தியசாலையில் அனுமதி ஹொரணை - பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஹொரணை வடக்கு உடுவையில் வசித்து வந்த கே. ஜி கிம்ஹானி 26 வயதான ஒரு குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மூன்று வயது சிறுமி மற்றும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மூவரும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது  ஜீப் ரக வாகனம் ஒன்று பொரலுகொட முதலீட்டு வலயத்திற்கு திரும்பும் சந்திக்கு அருகில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பில் ஜீப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement