• Jan 25 2025

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி...!

Sharmi / Mar 15th 2024, 9:11 am
image

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் மேற்பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்றையதினம்(14) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் ம.மணிசேகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனும் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளருமான சி.சிவபாலா கலந்து கொண்டதுடன் , சிறப்பு விருந்தினராக தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் வே.அரசகேசரி மற்றும் கல்லூரியின் ஐக்கிய இராட்சிய பழையமாணவர் சங்க பிரதிநிதி அ.விமலதாசனும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் மேற்பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்றையதினம்(14) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.கல்லூரி அதிபர் ம.மணிசேகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவனும் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளருமான சி.சிவபாலா கலந்து கொண்டதுடன் , சிறப்பு விருந்தினராக தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் வே.அரசகேசரி மற்றும் கல்லூரியின் ஐக்கிய இராட்சிய பழையமாணவர் சங்க பிரதிநிதி அ.விமலதாசனும் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement