• Apr 17 2026

இலங்கையை வாட்டும் பசியும் பட்டினியும்! கிராமப்புற மக்கள் வறுமையின் பிடியில்..! அதிர்ச்சித் தகவல்

Chithra / Mar 13th 2026, 7:08 pm
image



இலங்கை மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 


கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு இதனைத்தெரிவித்துள்ளது.


இலங்கையில் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிப்பதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.


எனவே, வறுமையை ஒழிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கிராம மட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நிலவும் வறுமைக்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து, சமூக அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகளுடன் இணைந்து முறையான அபிவிருத்தித் திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கைக்கு அதன் பாதிப்பு குறைவாகவே காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


கடந்த 15 மாத காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட காத்திரமான நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும். 


அவ்வாறு பொருளாதாரத்தை சீர்செய்யாமல் இருந்திருந்தால், நாடு மீண்டும் ஒரு வரிசை யுகத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.   

இலங்கையை வாட்டும் பசியும் பட்டினியும் கிராமப்புற மக்கள் வறுமையின் பிடியில். அதிர்ச்சித் தகவல் இலங்கை மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு இதனைத்தெரிவித்துள்ளது.இலங்கையில் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிப்பதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.எனவே, வறுமையை ஒழிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கிராம மட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நிலவும் வறுமைக்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து, சமூக அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகளுடன் இணைந்து முறையான அபிவிருத்தித் திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கைக்கு அதன் பாதிப்பு குறைவாகவே காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.கடந்த 15 மாத காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட காத்திரமான நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும். அவ்வாறு பொருளாதாரத்தை சீர்செய்யாமல் இருந்திருந்தால், நாடு மீண்டும் ஒரு வரிசை யுகத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement