• Sep 08 2024

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவன், மனைவி மீது துப்பாக்கிச்சூடு! மித்தெனியவில் பரபரப்பு

Chithra / Jul 22nd 2024, 10:24 am
image

Advertisement

 

அம்பாந்தோட்டை, மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்பொத்தயாய - ஜூலம்பிட்டிய வீதியில் 6ஆவது மைல்கல் அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற கணவர் படுகாயமடைந்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  பின்புறத்தில் அமர்ந்திருந்த மனைவியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஜூலம்பிட்டிய பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய கணவரும் 40 வயதுடைய மனைவியுமே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தங்களது கடையைப் பூட்டி விட்டு  வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி தாரிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியைச் சம்பவ இடத்திலேயே வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவன், மனைவி மீது துப்பாக்கிச்சூடு மித்தெனியவில் பரபரப்பு  அம்பாந்தோட்டை, மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்பொத்தயாய - ஜூலம்பிட்டிய வீதியில் 6ஆவது மைல்கல் அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற கணவர் படுகாயமடைந்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  பின்புறத்தில் அமர்ந்திருந்த மனைவியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்கள் மித்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.ஜூலம்பிட்டிய பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய கணவரும் 40 வயதுடைய மனைவியுமே காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் தங்களது கடையைப் பூட்டி விட்டு  வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.துப்பாக்கி தாரிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியைச் சம்பவ இடத்திலேயே வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement