இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், மனைவி சாம்பார் சமைத்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறு, பொலிஸ் அவசர சேவை வரை சென்ற சம்பவம் உள்ளூர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
படவுன் மாவட்டத்தின் வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு பொறித்த உணவுகள் அதிகம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவரது மனைவி அடிக்கடி சாம்பார் உள்ளிட்ட உணவுகளை சமைத்து பரிமாறி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி இரவு மீண்டும் சாம்பார் சமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வரை வாக்குவாதம் நீடித்த நிலையில், கோபமடைந்த கணவர் இறுதியாக 112 என்ற அவசர சேவை எண்ணுக்கு அழைத்து பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
குடும்பத்தில் கடுமையான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கருதி பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு சென்ற பின்னரே, பிரச்சினைக்கான காரணம் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
தனக்கு தினமும் பொறித்த குழம்பு அல்லது பொறித்த உணவு வேண்டும் என்றும், ஆனால் தனது மனைவி தொடர்ந்து சாம்பார் உள்ளிட்ட உணவுகளை சமைத்து வருவதாகவும் கணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், கணவன்–மனைவி இருவரையும் அமர வைத்து சமாதானப்படுத்தியுள்ளனர். மேலும், குடும்ப உறுப்பினர்களுடனும் பேசி, சிறிய விஷயத்தை பெரும் தகராறாக மாற்ற வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.
நள்ளிரவில் உணவு தொடர்பான தகராறுக்காக அவசர பொலிஸ் சேவையை அழைத்த சம்பவம் என்பதால், இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
இறுதியில், கணவன்–மனைவி இருவரும் சமரசம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, பொலிஸார் புகாரை முடித்து வைத்துள்ளனர்.
மனைவியுடன் சண்டையிட்ட கணவர்- இறுதியில் நடந்த விபரீதம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், மனைவி சாம்பார் சமைத்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறு, பொலிஸ் அவசர சேவை வரை சென்ற சம்பவம் உள்ளூர் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.படவுன் மாவட்டத்தின் வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு பொறித்த உணவுகள் அதிகம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அவரது மனைவி அடிக்கடி சாம்பார் உள்ளிட்ட உணவுகளை சமைத்து பரிமாறி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி இரவு மீண்டும் சாம்பார் சமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வரை வாக்குவாதம் நீடித்த நிலையில், கோபமடைந்த கணவர் இறுதியாக 112 என்ற அவசர சேவை எண்ணுக்கு அழைத்து பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.குடும்பத்தில் கடுமையான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கருதி பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.ஆனால் அங்கு சென்ற பின்னரே, பிரச்சினைக்கான காரணம் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.தனக்கு தினமும் பொறித்த குழம்பு அல்லது பொறித்த உணவு வேண்டும் என்றும், ஆனால் தனது மனைவி தொடர்ந்து சாம்பார் உள்ளிட்ட உணவுகளை சமைத்து வருவதாகவும் கணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், கணவன்–மனைவி இருவரையும் அமர வைத்து சமாதானப்படுத்தியுள்ளனர். மேலும், குடும்ப உறுப்பினர்களுடனும் பேசி, சிறிய விஷயத்தை பெரும் தகராறாக மாற்ற வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனர்.நள்ளிரவில் உணவு தொடர்பான தகராறுக்காக அவசர பொலிஸ் சேவையை அழைத்த சம்பவம் என்பதால், இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.இறுதியில், கணவன்–மனைவி இருவரும் சமரசம் செய்துகொண்டதைத் தொடர்ந்து, பொலிஸார் புகாரை முடித்து வைத்துள்ளனர்.