நான் நாட்டிற்காகவே செயல்பட்டேன். தனிப்பட்ட இலாபத்திற்காக அல்ல என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஆட்சியின் உண்மையான முகம் இப்போது வெளிவருவது போல் தெரிகிறது. எல்லா துறைகளிலும் இடம்பெறும் இந்த அரசியல் பழிவாங்கல்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தான் கைது செய்யப்படுவதற்கு சற்று முன் நாட்டு மக்களுக்கு கூற விரும்பியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை (23) இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் அகிலவிராஜ் காரியவசம் குரல் ஒலிப்பதிவின் மூலம் இதனை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக மீறல்களையும், அரசியல் பழிவாங்கல்களையும் இனியும் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை எனவும் சகல கட்சிகளுடனும் இணைந்து ஜனநாயக போராட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நான் நாட்டிற்காகவே செயல்பட்டேன்; கைதுக்கு முன்னர் ரணில் வௌியிட்ட கருத்து நான் நாட்டிற்காகவே செயல்பட்டேன். தனிப்பட்ட இலாபத்திற்காக அல்ல என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்த ஆட்சியின் உண்மையான முகம் இப்போது வெளிவருவது போல் தெரிகிறது. எல்லா துறைகளிலும் இடம்பெறும் இந்த அரசியல் பழிவாங்கல்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.தான் கைது செய்யப்படுவதற்கு சற்று முன் நாட்டு மக்களுக்கு கூற விரும்பியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை (23) இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் அகிலவிராஜ் காரியவசம் குரல் ஒலிப்பதிவின் மூலம் இதனை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக மீறல்களையும், அரசியல் பழிவாங்கல்களையும் இனியும் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை எனவும் சகல கட்சிகளுடனும் இணைந்து ஜனநாயக போராட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.