• Sep 20 2024

நாட்டு மக்கள் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை - ஜனாதிபதி! SamugamMedia

Tamil nila / Feb 22nd 2023, 9:03 pm
image

Advertisement

இன்னும் 25 வருடங்களில் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து ” அபிவிருத்தியடைந்த நாட்டை” கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.


தமது அரசியல் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு தன்னுடன் இணையுமாறு எவருக்கும் கூறவில்லை எனவும், மாறாக வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு போட்டி எண்ணத்தை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.



கொழும்பு றோயல் கல்லூரியில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.


நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு தாம் ஜனாதிபதியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட உறுதியுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.


எவ்வாறான தடைகள் வந்தாலும் இந்த வேலைத்திட்டம் நிறுத்தப்போவதில்லை எனவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான வேலைத்திட்டம் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.



நாட்டின் பொருளாதார மீட்சியை உருவாக்குவதுடன் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பையும் அனைவரும் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.


ஒரு நாடாக நாம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் நேரத்தில் நான் இன்று உங்கள் முன்னிலையில் உரையாற்றுகிறேன். கடந்த 400 வருடங்களாக நாட்டில் இப்படியொரு நிலை ஏற்படவில்லை. இன்று நமது பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நான் இங்கு பொதுவான பொருளாதாரப் விடயங்களைப் பற்றி பேசவில்லை. ஆனால் இந்த நிலை உங்கள் அனைவரையும் பாதிக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரத் தடை மற்றும் விவசாயத்திற்கு உரம் கிடைக்காமை, வரி அதிகரிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்நாட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.



நான் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சரிந்திருந்தது. நான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரதமர் பதவியை பொறுப்பேற்றார். முதலில் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டியது நமது கடமையாக இருந்தது. அதற்கிணங்க, நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கையை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் தேவையான எந்தவொரு முடிவையும் ஒரு வருடத்திற்குள் எடுப்பதற்கு நான் தீர்மானித்தேன்.


இது கடினமானதொரு பணியாகும். ஆனால் இந்த நாடு வங்குரோத்தடைந்த நாடாக நீடிப்பதை நான் விரும்பவில்லை. இந்த நாட்டு மக்கள் கஷ்டப்படுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நாம் மீண்டும் எழுந்து நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதனால்தான் இந்த அனைத்து முடிவுகளையும் எடுத்தேன். அதற்கு பிரதமரும் எனக்கு ஆதரவளித்தார்.


ஆனால் நான் எடுக்க வேண்டிய சில முடிவுகள் கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அந்த முடிவுகளுக்காக எனக்கு திட்டுவாங்க நேரிடும்.ஆனால் இந்த முடிவுகளை எடுக்காமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.


சவால்களை ஏற்றுக்கொள்வதோடு, நாட்டிற்கு எது சரியானது மற்றும் நல்லதை முன்னெடுப்பதற்கு இந்த றோயல் கல்லூரியில் இருந்து நான் கற்றுக்கொண்டேன்


எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், நான் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை யோசித்தேன். அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன , எந்த அளவுக்கு அதிருப்தி ஏற்படும் என்று. எனவே இந்த முடிவை எடுக்க வேண்டுமா என்று நான் சிந்தித்துள்ளேன். ஆனால் நாட்டின் நலனுக்காகவும், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவும் அந்த கடினமான முடிவுகளை நான் எடுக்க வேண்டியிருந்தது.



நாம் வங்குரோத்தான நாடாகவும், பிச்சைக்கார நாடாகவும் இருக்க முடியாது. அதனால் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த ஆண்டுக்குள் நமது நாட்டின் பொருளாதார நிலையில் ஓரளவு முன்னேற்றம் காண்போம் என்று உறுதியளிக்கிறேன்.


நாட்டை வங்குரோதத்தில் தள்ளும் பழைய முறைப்படி அன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய முறையின் கீழ் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தேவையான அடித்தளத்தை நாங்கள் அமைத்துள்ளோம்.


இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு பாதுகாப்புப் படையினர், பொலிஸார், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். இதுதான் நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டிய சவாலாகும்.


நாட்டு மக்கள் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை - ஜனாதிபதி SamugamMedia இன்னும் 25 வருடங்களில் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து ” அபிவிருத்தியடைந்த நாட்டை” கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.தமது அரசியல் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு தன்னுடன் இணையுமாறு எவருக்கும் கூறவில்லை எனவும், மாறாக வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு போட்டி எண்ணத்தை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.கொழும்பு றோயல் கல்லூரியில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு தாம் ஜனாதிபதியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட உறுதியுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.எவ்வாறான தடைகள் வந்தாலும் இந்த வேலைத்திட்டம் நிறுத்தப்போவதில்லை எனவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான வேலைத்திட்டம் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.நாட்டின் பொருளாதார மீட்சியை உருவாக்குவதுடன் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பையும் அனைவரும் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.ஒரு நாடாக நாம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும் நேரத்தில் நான் இன்று உங்கள் முன்னிலையில் உரையாற்றுகிறேன். கடந்த 400 வருடங்களாக நாட்டில் இப்படியொரு நிலை ஏற்படவில்லை. இன்று நமது பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நான் இங்கு பொதுவான பொருளாதாரப் விடயங்களைப் பற்றி பேசவில்லை. ஆனால் இந்த நிலை உங்கள் அனைவரையும் பாதிக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரத் தடை மற்றும் விவசாயத்திற்கு உரம் கிடைக்காமை, வரி அதிகரிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்நாட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.நான் நாட்டைப் பொறுப்பேற்றபோது, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சரிந்திருந்தது. நான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரதமர் பதவியை பொறுப்பேற்றார். முதலில் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டியது நமது கடமையாக இருந்தது. அதற்கிணங்க, நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இலங்கையை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் தேவையான எந்தவொரு முடிவையும் ஒரு வருடத்திற்குள் எடுப்பதற்கு நான் தீர்மானித்தேன்.இது கடினமானதொரு பணியாகும். ஆனால் இந்த நாடு வங்குரோத்தடைந்த நாடாக நீடிப்பதை நான் விரும்பவில்லை. இந்த நாட்டு மக்கள் கஷ்டப்படுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை. நாம் மீண்டும் எழுந்து நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதனால்தான் இந்த அனைத்து முடிவுகளையும் எடுத்தேன். அதற்கு பிரதமரும் எனக்கு ஆதரவளித்தார்.ஆனால் நான் எடுக்க வேண்டிய சில முடிவுகள் கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அந்த முடிவுகளுக்காக எனக்கு திட்டுவாங்க நேரிடும்.ஆனால் இந்த முடிவுகளை எடுக்காமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.சவால்களை ஏற்றுக்கொள்வதோடு, நாட்டிற்கு எது சரியானது மற்றும் நல்லதை முன்னெடுப்பதற்கு இந்த றோயல் கல்லூரியில் இருந்து நான் கற்றுக்கொண்டேன்எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், நான் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை யோசித்தேன். அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன , எந்த அளவுக்கு அதிருப்தி ஏற்படும் என்று. எனவே இந்த முடிவை எடுக்க வேண்டுமா என்று நான் சிந்தித்துள்ளேன். ஆனால் நாட்டின் நலனுக்காகவும், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவும் அந்த கடினமான முடிவுகளை நான் எடுக்க வேண்டியிருந்தது.நாம் வங்குரோத்தான நாடாகவும், பிச்சைக்கார நாடாகவும் இருக்க முடியாது. அதனால் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த ஆண்டுக்குள் நமது நாட்டின் பொருளாதார நிலையில் ஓரளவு முன்னேற்றம் காண்போம் என்று உறுதியளிக்கிறேன்.நாட்டை வங்குரோதத்தில் தள்ளும் பழைய முறைப்படி அன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய முறையின் கீழ் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தேவையான அடித்தளத்தை நாங்கள் அமைத்துள்ளோம்.இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு பாதுகாப்புப் படையினர், பொலிஸார், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். இதுதான் நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டிய சவாலாகும்.

Advertisement

Advertisement

Advertisement