• Sep 19 2024

தொழிற்சங்க போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை..! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

Chithra / Jul 9th 2024, 9:37 am
image

Advertisement

 

அரச பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவளிக்க போவதில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போக்குவரத்து, வரிக் கொள்கை போன்றன மருத்துவர்கள் உள்ளிட்ட அரசாங்க பணியாளர்கள் அனைவருக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு கிட்டியுள்ளதாகவும் அதனால் தொழிற்சங்க போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் தொழிற்சங்க போராட்டம் குறித்து எந்தவொரு தொழிற்சங்கமும் தமக்கு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வழங்கவில்லை எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே நாடு முழுவதிலும் உள்ள தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளப்போவதில்லை என சங்கம் அறிவித்துள்ளது. 

தொழிற்சங்க போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு  அரச பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவளிக்க போவதில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்றும் நாளையும் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போக்குவரத்து, வரிக் கொள்கை போன்றன மருத்துவர்கள் உள்ளிட்ட அரசாங்க பணியாளர்கள் அனைவருக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.இந்த பிரச்சினைகளுக்கு ஓரளவு தீர்வு கிட்டியுள்ளதாகவும் அதனால் தொழிற்சங்க போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் தொழிற்சங்க போராட்டம் குறித்து எந்தவொரு தொழிற்சங்கமும் தமக்கு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வழங்கவில்லை எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.எனவே நாடு முழுவதிலும் உள்ள தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளப்போவதில்லை என சங்கம் அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement