• Nov 14 2024

நாட்டில் சிங்கள மொழியைப் போல் தமிழ் மொழியையும் நான் பாதுகாப்பேன்- நாமல் உறுதி..!

Sharmi / Sep 11th 2024, 9:04 am
image

பௌத்த கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்ட இந் நாட்டில் ஏனைய இன மக்களின் கலாசாரத்துக்கும் முக்கியத்துவம் வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்    ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்

மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தம்பிமுத்து தயாபரன் தலைமையில்  நேற்றையதினம்(10) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் எனது தந்தையின் காலத்திலேயே அதிகமான அபிவிருத்திகளைக் கண்டது. தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளைப் போன்று கிழக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். 

எமது  அரசில்  அதிவேக வீதிகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கொண்டுவரப்படும் என நான் உறுதியளிக்கின்றேன். இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை, அபிவிருத்தி என்பன முன்னேற்றம் அடையும். இங்குள்ள விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் என்பனவற்றுக்கு ஏற்றுமதி மூலம் உலக சந்தையில் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

எங்களுக்குத் தேவை இந்த நாட்டை அபிவிருத்தியுடைய நாட்டாக மாற்ற வேண்டும் என்பதே. இங்குள்ள இளைஞர்களுக்குப் பலமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இங்குள்ள அரசியல்வாதிகள் இன, மத ரீதியான பணிகளையே முன்னெடுத்து வருகின்றனர். ஏற்படவுள்ள மாற்றத்தைப் பற்றி பிழையான தகவல்கள் வழங்க முடியாது. இவர்களுக்கான நல்ல ஒரு எதிர்காலத்தை என்னால் வழங்க முடியும் என உறுதி கூறுகின்றேன்.

இலங்கையிலுள்ள கலாசாரங்களை, இங்குள்ள இளைஞர், யுவதிகளைப் பற்றி எவருமே சிந்திப்பதில்லை. இலங்கையிலுள்ள கலாசாரங்களை பௌத்த கலாசாரத்துக்குச் சமனாக கிழக்கு மாகாண கலாசாரங்களையும் என்னால் பாதுகாக்க முடியும் என உறுதி  என உறுதி கூறுகின்றேன்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் இங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை என்னால் பெற்றுத் தர முடியும். கடந்த காலங்களில் மக்கள் கஷ்ட காலத்தைக் கடந்து வந்துள்ளதுடன் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் இனவாதம், மதவாதம் அதிகரிக்கின்றது. பிரிவினையுடைய அரசியலை நான் முன்னெடுப்பதில்லை. நான் முடியுமானவற்றை மட்டுமே கூறுவேன்.

இங்குள்ள  உங்களுடைய திறமைகளைப் பாவித்து வெளிநாடுகளைப் போல் வியாபாரம், விவசாயம் என்பனவற்றில் முன்னேற்றமடைந்து தொழில்நுட்பத்துடன் கூறிய அறிவைப் பெற்று வீட்டுக்கு உதவுமாறு நான் அழைப்பு விடுகின்றேன். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற உதவுமாறு உங்களிடம் வேண்டுகின்றேன். புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும். அதற்கு நான் உதவி செய்வேன். மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் உங்களிடம் வேண்டுகின்றேன் எனவும் தெரிவித்தார்.

நாட்டில் சிங்கள மொழியைப் போல் தமிழ் மொழியையும் நான் பாதுகாப்பேன்- நாமல் உறுதி. பௌத்த கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்ட இந் நாட்டில் ஏனைய இன மக்களின் கலாசாரத்துக்கும் முக்கியத்துவம் வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்    ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தம்பிமுத்து தயாபரன் தலைமையில்  நேற்றையதினம்(10) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.கிழக்கு மாகாணம் எனது தந்தையின் காலத்திலேயே அதிகமான அபிவிருத்திகளைக் கண்டது. தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளைப் போன்று கிழக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். எமது  அரசில்  அதிவேக வீதிகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கொண்டுவரப்படும் என நான் உறுதியளிக்கின்றேன். இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை, அபிவிருத்தி என்பன முன்னேற்றம் அடையும். இங்குள்ள விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் என்பனவற்றுக்கு ஏற்றுமதி மூலம் உலக சந்தையில் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.எங்களுக்குத் தேவை இந்த நாட்டை அபிவிருத்தியுடைய நாட்டாக மாற்ற வேண்டும் என்பதே. இங்குள்ள இளைஞர்களுக்குப் பலமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.இங்குள்ள அரசியல்வாதிகள் இன, மத ரீதியான பணிகளையே முன்னெடுத்து வருகின்றனர். ஏற்படவுள்ள மாற்றத்தைப் பற்றி பிழையான தகவல்கள் வழங்க முடியாது. இவர்களுக்கான நல்ல ஒரு எதிர்காலத்தை என்னால் வழங்க முடியும் என உறுதி கூறுகின்றேன்.இலங்கையிலுள்ள கலாசாரங்களை, இங்குள்ள இளைஞர், யுவதிகளைப் பற்றி எவருமே சிந்திப்பதில்லை. இலங்கையிலுள்ள கலாசாரங்களை பௌத்த கலாசாரத்துக்குச் சமனாக கிழக்கு மாகாண கலாசாரங்களையும் என்னால் பாதுகாக்க முடியும் என உறுதி  என உறுதி கூறுகின்றேன்.வெளிநாடுகளுக்குச் செல்லும் இங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை என்னால் பெற்றுத் தர முடியும். கடந்த காலங்களில் மக்கள் கஷ்ட காலத்தைக் கடந்து வந்துள்ளதுடன் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் இனவாதம், மதவாதம் அதிகரிக்கின்றது. பிரிவினையுடைய அரசியலை நான் முன்னெடுப்பதில்லை. நான் முடியுமானவற்றை மட்டுமே கூறுவேன்.இங்குள்ள  உங்களுடைய திறமைகளைப் பாவித்து வெளிநாடுகளைப் போல் வியாபாரம், விவசாயம் என்பனவற்றில் முன்னேற்றமடைந்து தொழில்நுட்பத்துடன் கூறிய அறிவைப் பெற்று வீட்டுக்கு உதவுமாறு நான் அழைப்பு விடுகின்றேன். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற உதவுமாறு உங்களிடம் வேண்டுகின்றேன். புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும். அதற்கு நான் உதவி செய்வேன். மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் உங்களிடம் வேண்டுகின்றேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement