பதுளை மாவட்டத்தில் நேற்றிரவு(06) ஐஸ் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சியுடனான காலநிலை நிலவி வந்த நிலையில் நேற்றையதினம் மாலை பலாங்கொடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன் இந்த மழையுடன் ஐஸ்கட்டிகளும் தரையில் விழுந்ததாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொட கிரிமதித்தன்ன, யஹலவெல, பரியதன்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய, பல்லபனதென்ன, கெகில்ல, பதுகாமிமன போன்ற பிரதேசங்களில் இந்த மழை பெய்துள்ளது.
இந்த மழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மழையினால் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பின்னர் அது சீரமைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தியத்தலாவையில் பெய்த ஐஸ் கட்டி மழை. மகிழ்ச்சியில் திளைத்த மக்கள். பதுளை மாவட்டத்தில் நேற்றிரவு(06) ஐஸ் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுநாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சியுடனான காலநிலை நிலவி வந்த நிலையில் நேற்றையதினம் மாலை பலாங்கொடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன் இந்த மழையுடன் ஐஸ்கட்டிகளும் தரையில் விழுந்ததாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.பலாங்கொட கிரிமதித்தன்ன, யஹலவெல, பரியதன்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய, பல்லபனதென்ன, கெகில்ல, பதுகாமிமன போன்ற பிரதேசங்களில் இந்த மழை பெய்துள்ளது.இந்த மழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.மழையினால் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பின்னர் அது சீரமைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.