• May 02 2025

யாழில் சுற்றிவளைக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம்...! நீதிமன்றம் விடுத்த உத்தரவு...!

Sharmi / May 15th 2024, 5:51 pm
image

யாழில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நிலையமொன்று  சுற்றிவளைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இரு சந்தேக நபர்களையும் ஒரு வாரத்துக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. 

இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது ஐஸ்போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டன.

இதன்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும், பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையிலேயே சந்தேக நபர்களினை ஒரு வாரத்துக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்தது. 

இதேவேளை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் சுற்றிவளைக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம். நீதிமன்றம் விடுத்த உத்தரவு. யாழில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நிலையமொன்று  சுற்றிவளைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இரு சந்தேக நபர்களையும் ஒரு வாரத்துக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஐஸ்போதைப்பொருள் உற்பத்தி செய்வதற்கு பயன்படும் பொருட்களும் மீட்கப்பட்டன.இதன்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும், பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையிலேயே சந்தேக நபர்களினை ஒரு வாரத்துக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்தது. இதேவேளை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now