விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 15 மாவட்டங்களில் 95 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,000க்கு அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதேநேரம், மேல் மாகாணத்தில் சிக்குன்குன்யா நோய் தொற்றும் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அபாயமிக்க பகுதிகள் அடையாளம்; விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 15 மாவட்டங்களில் 95 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,000க்கு அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அதேநேரம், மேல் மாகாணத்தில் சிக்குன்குன்யா நோய் தொற்றும் அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.