• Nov 28 2024

தேர்தலைப் பிற்போட்டால் ஐ.தே.க. அழிந்துவிடும் - எச்சரித்த மஹிந்த...!

Anaath / Jun 13th 2024, 4:55 pm
image

பிரதான தேர்தல்களைப் பிற்போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முற்பட்டால் அதுவே அக்கட்சிக்கு இறுதிப் பயணமாக அமைந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

"அரசமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலும், அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். இரு தேர்தல்களையும் பிற்போட முடியாது. அவ்வாறானதொரு முட்டாள்தனமான முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்காது என்றே நம்புகின்றேன். அவ்வாறு இறங்கினால் அதுவே அக்கட்சியின் இறுதிப் பயணமாக அமையும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீதே மக்களுக்கு நம்பிக்கை உள்ளது." - என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலைப் பிற்போட்டால் ஐ.தே.க. அழிந்துவிடும் - எச்சரித்த மஹிந்த. பிரதான தேர்தல்களைப் பிற்போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முற்பட்டால் அதுவே அக்கட்சிக்கு இறுதிப் பயணமாக அமைந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "அரசமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலும், அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். இரு தேர்தல்களையும் பிற்போட முடியாது. அவ்வாறானதொரு முட்டாள்தனமான முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்காது என்றே நம்புகின்றேன். அவ்வாறு இறங்கினால் அதுவே அக்கட்சியின் இறுதிப் பயணமாக அமையும்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீதே மக்களுக்கு நம்பிக்கை உள்ளது." - என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement