• Sep 17 2026

பொலிசாரால் முடியாவிட்டால் ஆயுதங்களை இளைஞர்களிடம் கையளியுங்கள் – ரவிகரன்

dorin / Sep 16th 2026, 4:12 pm
image

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொலிசாரால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாதெனில் எமது இளைஞர், யுவதிகளிடம் ஆயுங்களைக் கையளித்தால் அவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை விடுதலைப் புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இருந்திருக்கவில்லையெனவும், நடுநிசியில்கூட பெண்கள் உலவக்கூடிய நிலையிருந்ததாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தற்போது அத்தகைய நிலை இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 15.09.2026நேற்று இடம்பெற்றபோது, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளரால் வெளிப்படுத்தப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

சட்டவிரோத மணல் அகழ்வென்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாகவுள்ளது.

விசுவமடு நெத்தலியாறு தொடக்கம் மன்னாகண்டல் கெரடமடுவரைக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு மிக அதிகளவில் இடம்பேற்றுவருகின்றது.

அத்தகைய சில சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளை பொலிசார் கைதுசெய்தாலும், அதையும் தாண்டி அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக மன்னாகண்டல், கெரடமடு பேராற்றில் ஒவ்வொருநாளும் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் மிக அதிகளவில் இடம்பெற்றுவருகின்றன.

இதுதொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எம்மால் முறைப்பாடு செய்தால் உடனடியாக பொலிசாரை அப்பகுதிக்கு அனுப்புவதாகத் தெரிவிப்பார்.

ஆனால் அங்கு செல்கின்ற பொலிசார் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களிடமிருந்து கையூட்டுக்களைப் பெற்றுச்செல்வதாக எமக்கு பொதுமக்களால் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

அத்தோடு திருகோணமலை மாவட்டம், புல்மோட்டையில் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை பெற்று வைத்திருக்கும் சிலர், மன்னாகண்டல் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுச் செயற்பாட்டை மேற்கொண்டுவருவதான முறைப்பாடுகளும் தமக்கு கிடைத்திருப்பதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளரால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகளின் காலத்தில் 06அடி அகலமாக இருந்த ஆறு, சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் காரணமாகத் தற்போது 45அகலமாக மாறியுள்ளதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மணற்கடத்தல், மணற்கொள்ளைச் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் எமக்கு அதிக முறைப்பாடுளை வழங்கியுள்ளனர்.

அதேவேளை இங்குள்ள மக்கள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு மணலைப் பெற்றுக்கொள்ள முடியாதநிலை காணப்படுவதாகவும் மக்களால் எம்மிடம் முறைப்பாடுசெய்யப்படுகின்றது. ஆனாலும் சட்டவிரோத மணற்கொள்ளைச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அத்தோடு சட்டவிரோத மணற்கொள்ளை மற்றும் மணற்கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவேண்டிய பொலிசார், கையூட்டுக்களைப் பெற்றுக்கொண்டு சட்டவிரோத மணற்கொள்ளைச் செயற்பாடுகளுக்குத் துணையாகச் செயற்படுவதாகவும் மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்.

இத்தகைய சட்டவிரோத மணற்கொள்ளை மற்றும் மணற்கடத்தல் செயற்பாடுகளை பொலிசார் உடனடியாக கட்டுப்படுத்தவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்திருக்கவில்லை.

தற்போதுதான் கசிப்பு, கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் ஊடுருவல்கள், மணற்கொள்ளைகள், கிரவல் கொள்ளைகள், திருட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் என்பன தற்போது அதிகளவில் இடம்பெற்றுவருகின்றன.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் விபரங்களை மக்கள் என்னிடம் தந்தால், நான் உடனடியாக அத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் உரிய அமைச்சுக்களின் கவனத்திற்கு கொண்டுவருவேன்.

ஏற்கனவே வலைஞர்மடம் பகுதியில் இடம்பெறும் கசிப்பு உற்பத்தி செயற்பாடு தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன். பொலிசார் அந்த கசிப்பு உற்பத்திச் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அங்கு கசிப்பு உற்பத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக அப்பகுதி மக்களால் எமக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டிய பொலிசார் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பொலிசார் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தாமல் பிழையாக செயற்படுகின்றனர். கடமைகளை முறையாக மேற்கொள்ளமுடியவில்லை எனில் சீருடையைக் களைந்துவிட்டுச் செல்லுமாறு அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைனையே நானும் இங்கே கூறிக்கொள்ள வாரும்புகின்றேன்.

அதேவேளை ஆயுதக்குழுக்களாக இரவுநேரங்களில் மக்கள்மீது தாக்குதல்கள் மேற்கொள்வதான செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.

விடுதலைப்புலிகளின் காலத்தில் இரவு 12.00மணிக்குக்கூட பெண்கள் வெளியே உலவக்கூடிய நிலை இருந்தது. தற்போது நிலமை அவ்வாறில்லை.

எனவே இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிசார் கூடுதல் கவனஞ்செலுத்தவேண்டும் அவ்வாறு கட்டுப்படுத்த தவறினால் பாராளுமன்றில் ஒவ்வொரு அமர்விலும் இந்த விடயம் தொடர்பில் வெளிப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதன்போது புதுக்துடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி இதன்போது பதிலளிக்கையில்,

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 19 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இங்கு வசித்துவருகின்றனர். இந்நிலையில் 75வரையான பொலிஸ் உத்தியோகத்தர்களே புதுக்குடியிருப்பு பொலிஸ்நிலையத்தில் கடமையிலுள்ளனர்.

அந்தவகையில் இந்தவருடத்தில் ஜனவரிதொடக்கம் தற்போதுவரையில் கசிப்பு உற்பத்தி தொடர்பில் 702 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதற்கு முல்லைத்தீவு நீதிமன்றினால் கிட்டத்தட்ட 37இலட்சத்து 27,500ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கோடா உற்பத்தி 45வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. 25கஞ்சா வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதுடன், அதற்கு நீநிமன்றினால் 68000ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. ஹெரோயின் போதைபபொருள் தொடர்பில் 33வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதுதவிர சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கி தொடர்பில் 14வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத மணல் அகழ்வுதொடர்பில் 69 வழக்குகளும், சட்டவிரோத மண் அகழ்வு 09 வழக்குகளும், ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் 91 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இவ்வாறாக புதுக்குடியிருப்பு பொலிசாரால் அதிகவழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டினார்.

அத்தோடு சில பொலிஸ் உத்தியோகத்தர்களே இலஞ்சம்பெறுவதாகவும், அனைத்துபொலிஸ் உத்தியோகத்தர்களும் இலஞ்சம் பெறுவதில்லை எனவும் தெரிவித்த பொலிஸ் பொறுப்பதிகாரி, அதுதொடர்பில் உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினால் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவுந் தெரிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெறுகின்றனர் என, சபை முன்னிலையில் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி.

இவ்வாறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாக பொலிசாரால் இங்கு தெரிவிக்கப்பட்டாலும், தொடர்ந்து சட்டவிரோத செயற்பாடுகள் மிக அதிகளவில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இத்தகைய சட்டவிரோத சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனில், பொலிசார் தமது ஆயுதங்களை எங்களிடம் கையளிக்கட்டும். எமது இளைஞர், யுவதிகள் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள். சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை எமது இளைஞர்களிடம். உள்ளதாகவும் தெரிவித்தார்.


பொலிசாரால் முடியாவிட்டால் ஆயுதங்களை இளைஞர்களிடம் கையளியுங்கள் – ரவிகரன் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொலிசாரால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாதெனில் எமது இளைஞர், யுவதிகளிடம் ஆயுங்களைக் கையளித்தால் அவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.அதேவேளை விடுதலைப் புலிகளின் காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் இருந்திருக்கவில்லையெனவும், நடுநிசியில்கூட பெண்கள் உலவக்கூடிய நிலையிருந்ததாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தற்போது அத்தகைய நிலை இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 15.09.2026நேற்று இடம்பெற்றபோது, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளரால் வெளிப்படுத்தப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,சட்டவிரோத மணல் அகழ்வென்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாகவுள்ளது.விசுவமடு நெத்தலியாறு தொடக்கம் மன்னாகண்டல் கெரடமடுவரைக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு மிக அதிகளவில் இடம்பேற்றுவருகின்றது.அத்தகைய சில சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளை பொலிசார் கைதுசெய்தாலும், அதையும் தாண்டி அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.குறிப்பாக மன்னாகண்டல், கெரடமடு பேராற்றில் ஒவ்வொருநாளும் சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் மிக அதிகளவில் இடம்பெற்றுவருகின்றன.இதுதொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எம்மால் முறைப்பாடு செய்தால் உடனடியாக பொலிசாரை அப்பகுதிக்கு அனுப்புவதாகத் தெரிவிப்பார்.ஆனால் அங்கு செல்கின்ற பொலிசார் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களிடமிருந்து கையூட்டுக்களைப் பெற்றுச்செல்வதாக எமக்கு பொதுமக்களால் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.அத்தோடு திருகோணமலை மாவட்டம், புல்மோட்டையில் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை பெற்று வைத்திருக்கும் சிலர், மன்னாகண்டல் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுச் செயற்பாட்டை மேற்கொண்டுவருவதான முறைப்பாடுகளும் தமக்கு கிடைத்திருப்பதாகவும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளரால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.இந்நிலையில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,விடுதலைப்புலிகளின் காலத்தில் 06அடி அகலமாக இருந்த ஆறு, சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகள் காரணமாகத் தற்போது 45அகலமாக மாறியுள்ளதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.இந்த சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் மணற்கடத்தல், மணற்கொள்ளைச் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் எமக்கு அதிக முறைப்பாடுளை வழங்கியுள்ளனர்.அதேவேளை இங்குள்ள மக்கள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு மணலைப் பெற்றுக்கொள்ள முடியாதநிலை காணப்படுவதாகவும் மக்களால் எம்மிடம் முறைப்பாடுசெய்யப்படுகின்றது. ஆனாலும் சட்டவிரோத மணற்கொள்ளைச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.அத்தோடு சட்டவிரோத மணற்கொள்ளை மற்றும் மணற்கடத்தல் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவேண்டிய பொலிசார், கையூட்டுக்களைப் பெற்றுக்கொண்டு சட்டவிரோத மணற்கொள்ளைச் செயற்பாடுகளுக்குத் துணையாகச் செயற்படுவதாகவும் மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்.இத்தகைய சட்டவிரோத மணற்கொள்ளை மற்றும் மணற்கடத்தல் செயற்பாடுகளை பொலிசார் உடனடியாக கட்டுப்படுத்தவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்திருக்கவில்லை.தற்போதுதான் கசிப்பு, கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் ஊடுருவல்கள், மணற்கொள்ளைகள், கிரவல் கொள்ளைகள், திருட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் என்பன தற்போது அதிகளவில் இடம்பெற்றுவருகின்றன.இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் விபரங்களை மக்கள் என்னிடம் தந்தால், நான் உடனடியாக அத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் உரிய அமைச்சுக்களின் கவனத்திற்கு கொண்டுவருவேன்.ஏற்கனவே வலைஞர்மடம் பகுதியில் இடம்பெறும் கசிப்பு உற்பத்தி செயற்பாடு தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன். பொலிசார் அந்த கசிப்பு உற்பத்திச் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதாகத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அங்கு கசிப்பு உற்பத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக அப்பகுதி மக்களால் எமக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.அவ்வாறெனில் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டிய பொலிசார் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.பொலிசார் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தாமல் பிழையாக செயற்படுகின்றனர். கடமைகளை முறையாக மேற்கொள்ளமுடியவில்லை எனில் சீருடையைக் களைந்துவிட்டுச் செல்லுமாறு அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைனையே நானும் இங்கே கூறிக்கொள்ள வாரும்புகின்றேன்.அதேவேளை ஆயுதக்குழுக்களாக இரவுநேரங்களில் மக்கள்மீது தாக்குதல்கள் மேற்கொள்வதான செயற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.விடுதலைப்புலிகளின் காலத்தில் இரவு 12.00மணிக்குக்கூட பெண்கள் வெளியே உலவக்கூடிய நிலை இருந்தது. தற்போது நிலமை அவ்வாறில்லை.எனவே இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிசார் கூடுதல் கவனஞ்செலுத்தவேண்டும் அவ்வாறு கட்டுப்படுத்த தவறினால் பாராளுமன்றில் ஒவ்வொரு அமர்விலும் இந்த விடயம் தொடர்பில் வெளிப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.இதன்போது புதுக்துடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி இதன்போது பதிலளிக்கையில்,புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 19 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இங்கு வசித்துவருகின்றனர். இந்நிலையில் 75வரையான பொலிஸ் உத்தியோகத்தர்களே புதுக்குடியிருப்பு பொலிஸ்நிலையத்தில் கடமையிலுள்ளனர்.அந்தவகையில் இந்தவருடத்தில் ஜனவரிதொடக்கம் தற்போதுவரையில் கசிப்பு உற்பத்தி தொடர்பில் 702 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதற்கு முல்லைத்தீவு நீதிமன்றினால் கிட்டத்தட்ட 37இலட்சத்து 27,500ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.அத்தோடு கோடா உற்பத்தி 45வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. 25கஞ்சா வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதுடன், அதற்கு நீநிமன்றினால் 68000ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. ஹெரோயின் போதைபபொருள் தொடர்பில் 33வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.இதுதவிர சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கி தொடர்பில் 14வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத மணல் அகழ்வுதொடர்பில் 69 வழக்குகளும், சட்டவிரோத மண் அகழ்வு 09 வழக்குகளும், ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் 91 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.இவ்வாறாக புதுக்குடியிருப்பு பொலிசாரால் அதிகவழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டினார்.அத்தோடு சில பொலிஸ் உத்தியோகத்தர்களே இலஞ்சம்பெறுவதாகவும், அனைத்துபொலிஸ் உத்தியோகத்தர்களும் இலஞ்சம் பெறுவதில்லை எனவும் தெரிவித்த பொலிஸ் பொறுப்பதிகாரி, அதுதொடர்பில் உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினால் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவுந் தெரிவித்தார்.இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெறுகின்றனர் என, சபை முன்னிலையில் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி.இவ்வாறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதாக பொலிசாரால் இங்கு தெரிவிக்கப்பட்டாலும், தொடர்ந்து சட்டவிரோத செயற்பாடுகள் மிக அதிகளவில் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.இத்தகைய சட்டவிரோத சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனில், பொலிசார் தமது ஆயுதங்களை எங்களிடம் கையளிக்கட்டும். எமது இளைஞர், யுவதிகள் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவார்கள். சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வல்லமை எமது இளைஞர்களிடம். உள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement