• Jan 07 2025

கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மூன்று தமிழ் பிரதிநிதிகளை பெறலாம்- ஈ.பி.டி.பியினர் சுட்டிக்காட்டு..!

Sharmi / Nov 2nd 2024, 11:56 am
image

கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மூன்று தமிழ் பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் யாருடைய வாக்குகளையும் சிதறடித்து வாக்குகளை பெற வேண்டிய தேவை எமக்கில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா தெரிவித்தார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு மாவட்டத்தில் இந்தமுறை தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கம்.

அதனால், தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் 3 உறுப்பினர்களை கொழும்பில் பெற்றுக்கொள்ள முடியும்.

முன்னர் 2 பிரதிநிதித்துவத்தை கொழும்பு மாவட்டம் பெற்று வந்தது.

நாங்கள் யாருக்கும் போட்டியாக இருக்கப்போவதும் இல்லை மற்றவர்களின் வாக்குகளை பறித்துத்தான் நாங்கள் வெள்ள வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை.

இன்று கொழும்பு முழுவதும் வீணையின் நாதம் கேட்கிறது.

கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்டு, அதன் மூலம் கொழும்பு வாழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா எண்ணியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்த தலைவர்.

அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கொழும்பு மாவட்டத்திலும் செய்வதே எமது கட்சியின் திட்டமாகும்.

மக்கள் சேவை மகேசன் சேவை என நினைத்து எப்போதும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதை மிகவும் பெருமையாக கருதி செயற்படுபவர்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சபரிமலை அய்யப்ப தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு இலவச பயணச்சீட்டு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தமை, அவர்களுக்கு வசதி வாய்ப்புக்களை செய்துகொடுக்க நடவடிக்க எடுத்தமை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார். எதிர்காலத்திலும் அந்த திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பார்.

அதனால் ஈ.பி.டி.பி. கட்சிக்கு இந்த தேர்தலில் நாடு பூராகவும் குறைந்தது 5 உறுப்பினர்களையாவது பெற்றுக்கொள்வதே இலக்காகும்.

அதனால் கொழும்பு வாழ் மக்கள் தங்களின் வாக்குகளை வீணை சின்னத்துக்கு வழங்கி, தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மூன்று தமிழ் பிரதிநிதிகளை பெறலாம்- ஈ.பி.டி.பியினர் சுட்டிக்காட்டு. கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மூன்று தமிழ் பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் யாருடைய வாக்குகளையும் சிதறடித்து வாக்குகளை பெற வேண்டிய தேவை எமக்கில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா தெரிவித்தார்.ஈழமக்கள் ஜனநாயக கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,கொழும்பு மாவட்டத்தில் இந்தமுறை தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது நோக்கம்.அதனால், தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் 3 உறுப்பினர்களை கொழும்பில் பெற்றுக்கொள்ள முடியும். முன்னர் 2 பிரதிநிதித்துவத்தை கொழும்பு மாவட்டம் பெற்று வந்தது.நாங்கள் யாருக்கும் போட்டியாக இருக்கப்போவதும் இல்லை மற்றவர்களின் வாக்குகளை பறித்துத்தான் நாங்கள் வெள்ள வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை. இன்று கொழும்பு முழுவதும் வீணையின் நாதம் கேட்கிறது.கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்டு, அதன் மூலம் கொழும்பு வாழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா எண்ணியுள்ளார்.யாழ். மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்த தலைவர்.அந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கொழும்பு மாவட்டத்திலும் செய்வதே எமது கட்சியின் திட்டமாகும்.மக்கள் சேவை மகேசன் சேவை என நினைத்து எப்போதும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதை மிகவும் பெருமையாக கருதி செயற்படுபவர்.முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சபரிமலை அய்யப்ப தரிசனத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு இலவச பயணச்சீட்டு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தமை, அவர்களுக்கு வசதி வாய்ப்புக்களை செய்துகொடுக்க நடவடிக்க எடுத்தமை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார். எதிர்காலத்திலும் அந்த திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பார்.அதனால் ஈ.பி.டி.பி. கட்சிக்கு இந்த தேர்தலில் நாடு பூராகவும் குறைந்தது 5 உறுப்பினர்களையாவது பெற்றுக்கொள்வதே இலக்காகும்.அதனால் கொழும்பு வாழ் மக்கள் தங்களின் வாக்குகளை வீணை சின்னத்துக்கு வழங்கி, தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement