ராஜபக்சகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்தது என ஏற்றுக் கொள்ள முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சகளுக்கு உரிய பாடங்களை கற்பிக்க தவறினால் தேசிய மக்கள் சக்தி நாட்டை அபிவிருத்தி செய்ததாக ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சகளுக்கு உரிய பாடத்தை கற்பிக்கும் நாளிலேயே அநுர தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு உண்மையிலேயே சேவை ஆற்றியுள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவே யதார்த்தம். தமக்கு அதிகாரம் இல்லை என்றாலும் உண்மையை பேசுவதற்கு எப்பொழுதும் அஞ்சியது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சகளுக்கு உரிய பாடங்களை கற்பிக்க தவறினால் அநுர அரசை ஏற்க முடியாது - சரத் பொன்சேகாப கிரங்கம் ராஜபக்சகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்தது என ஏற்றுக் கொள்ள முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சகளுக்கு உரிய பாடங்களை கற்பிக்க தவறினால் தேசிய மக்கள் சக்தி நாட்டை அபிவிருத்தி செய்ததாக ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ராஜபக்சகளுக்கு உரிய பாடத்தை கற்பிக்கும் நாளிலேயே அநுர தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு உண்மையிலேயே சேவை ஆற்றியுள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.இதுவே யதார்த்தம். தமக்கு அதிகாரம் இல்லை என்றாலும் உண்மையை பேசுவதற்கு எப்பொழுதும் அஞ்சியது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.