• Nov 01 2024

முல்லைத்தீவில் 15 லட்சம் பெறுமதியான சட்டவிரோத தங்கூசி வலைகள் மீட்பு..! samugammedia

Chithra / Oct 24th 2023, 10:46 am
image

Advertisement


முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தில் கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினர் இன்று அதிகாலை 2.00‌ மணியலவில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது சுமார் 15 பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை கைப்பற்றியுள்ளனர்.

இதனோடு வலைகளுடன் 300 கிலோவுக்கு மேற்பட்ட மீன்களும் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி தொழில் செய்வதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு மட்டுமன்றி நன்னீர் மீன் வளங்கள் உட்பட நீர் நிலைகளின் சூழலும் பாதிப்படைகின்றன. 

எனவே, மீனவர்கள் பெருமளவு தொகை நிதியினை செலவு செய்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி தொழல் நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என  தெரிவித்த குமாரகுலசிங்கம் சங்கீதன்  கைப்பற்றிய  வலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


முல்லைத்தீவில் 15 லட்சம் பெறுமதியான சட்டவிரோத தங்கூசி வலைகள் மீட்பு. samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தில் கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினர் இன்று அதிகாலை 2.00‌ மணியலவில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது சுமார் 15 பெறுமதியான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை கைப்பற்றியுள்ளனர்.இதனோடு வலைகளுடன் 300 கிலோவுக்கு மேற்பட்ட மீன்களும் மீட்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குமாரகுலசிங்கம் சங்கீதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.இவ்வாறான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி தொழில் செய்வதன் மூலம் சுற்றுச் சூழலுக்கு மட்டுமன்றி நன்னீர் மீன் வளங்கள் உட்பட நீர் நிலைகளின் சூழலும் பாதிப்படைகின்றன. எனவே, மீனவர்கள் பெருமளவு தொகை நிதியினை செலவு செய்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி தொழல் நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என  தெரிவித்த குமாரகுலசிங்கம் சங்கீதன்  கைப்பற்றிய  வலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement