• Nov 25 2024

மக்களுக்கு நிவாரணைங்களை அதிகரிக்கும் அரசின் திட்டம் - இணங்கியது சர்வதேச நாணய நிதியம்!

Chithra / Oct 14th 2024, 12:01 pm
image

  

இலங்கையில் மக்களுக்கு  வழங்கப்பட்டுவரும் பொருளாதார நிவாரணங்களை மேலும் அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது என ஜனாதிபதியின் பொருளாதார மற்றும் நிதி ஆலோசகர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

மக்களிற்கு நிவாரணங்களை வழங்குவது குறித்த யோசனைகளை விரைவில் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிற்கு உதவிகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தே தற்போதைய அரசாங்கம் முக்கியமாக கவனம் செலுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார மீட்சியை மேலும் விரைவுபடுத்துவதற்கு பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம் என நாங்கள் வலியுறுத்தினோம்.

நிவாரணங்களை வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் எதிர்க்கவில்லை, எங்கள் திட்டங்களை முன்வைக்குமாறு  கேட்டுக்கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் நிவாரணங்கள் மக்களை போய் சேருவதை உறுதி செய்வது குறித்து நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.


மக்களுக்கு நிவாரணைங்களை அதிகரிக்கும் அரசின் திட்டம் - இணங்கியது சர்வதேச நாணய நிதியம்   இலங்கையில் மக்களுக்கு  வழங்கப்பட்டுவரும் பொருளாதார நிவாரணங்களை மேலும் அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது என ஜனாதிபதியின் பொருளாதார மற்றும் நிதி ஆலோசகர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.மக்களிற்கு நிவாரணங்களை வழங்குவது குறித்த யோசனைகளை விரைவில் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.பொதுமக்களிற்கு உதவிகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தே தற்போதைய அரசாங்கம் முக்கியமாக கவனம் செலுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார மீட்சியை மேலும் விரைவுபடுத்துவதற்கு பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம் என நாங்கள் வலியுறுத்தினோம்.நிவாரணங்களை வழங்குவதை சர்வதேச நாணய நிதியம் எதிர்க்கவில்லை, எங்கள் திட்டங்களை முன்வைக்குமாறு  கேட்டுக்கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.விரைவில் நிவாரணங்கள் மக்களை போய் சேருவதை உறுதி செய்வது குறித்து நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement