• Oct 25 2024

கடன் வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை விரைவாக அணுக எதிர்பார்ப்பு - சர்வதேச நாணய நிதியம்!

Tamil nila / Oct 25th 2024, 9:06 pm
image

Advertisement

இலங்கையுடனான நீடிக்கப்பட்ட கடன்வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மதிப்பாய்வு நடவடிக்கைகளை விரைவாக அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த வாரம் நடைபெறவுள்ள வருடாந்தக் கூட்டத்தின் போது, இலங்கையுடனான நிதி வசதித்திட்டம் தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிரிஷ்ணா ஸ்ரீனிவாசன் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர், இந்த மாத முதற் பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்றினால் அதிகாரிகளுடன் பல சுற்றுப் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்த முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் வங்குரோத்து நிலையை அடைந்த இலங்கை, தற்போது சாதகமான பொருளாதார வளர்ச்சியைக் காட்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போது இலங்கை சட்டரீதியான உடன்பாட்டை எட்டுவது அவசியமாகும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிரிஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கடன் வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை விரைவாக அணுக எதிர்பார்ப்பு - சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடனான நீடிக்கப்பட்ட கடன்வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மதிப்பாய்வு நடவடிக்கைகளை விரைவாக அணுகுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.அத்துடன், இந்த வாரம் நடைபெறவுள்ள வருடாந்தக் கூட்டத்தின் போது, இலங்கையுடனான நிதி வசதித்திட்டம் தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிரிஷ்ணா ஸ்ரீனிவாசன் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர், இந்த மாத முதற் பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்றினால் அதிகாரிகளுடன் பல சுற்றுப் பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்த முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.2022 ஆம் ஆண்டில் வங்குரோத்து நிலையை அடைந்த இலங்கை, தற்போது சாதகமான பொருளாதார வளர்ச்சியைக் காட்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போது இலங்கை சட்டரீதியான உடன்பாட்டை எட்டுவது அவசியமாகும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிரிஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement