• Oct 29 2025

2026ல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு

IMF
Chithra / Oct 29th 2025, 8:54 am
image


இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் ஆண்டில்  3.1 சதவீதம் வரை வளர்ச்சியடைய முடியுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது 

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின்  இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை அரசாங்கம் சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்த பின்னணியில், பொருளாதார வளர்ச்சியில் வலுவான மீட்சி ஏற்பட்டதாகவும், கடந்த ஆண்டு வளர்ச்சி 5 சதவீதமாகக் காணப்பட்ட அதேவேளை, இந்த ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி 4.8 சதவீதமாக  இருந்ததாகவும் அந்த ஊடக சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது அந்த வலுவான மீட்சியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சாதாரண நிலைக்குத் திரும்புதல் மாத்திரமே நிகழ்ந்துள்ளதாகவும், பொருளாதார நடவடிக்கைகளின் மட்டத்திற்கேற்ப, சில வளர்ச்சிகளின் தாக்கம் தற்காலிகமானது எனவும் அங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. 

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாகக் காணப்படுவதுடன், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உண்மையில் எதிர்பார்த்ததை விட வலுவான மீட்சியைக் காணக்கூடியதாக இருக்கும் எனவும், ஆசியாவின் பொருளாதாரம் குறித்து நடைபெற்ற அந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

2026ல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு இலங்கையின் பொருளாதாரம் எதிர்வரும் ஆண்டில்  3.1 சதவீதம் வரை வளர்ச்சியடைய முடியுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின்  இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை அரசாங்கம் சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்த பின்னணியில், பொருளாதார வளர்ச்சியில் வலுவான மீட்சி ஏற்பட்டதாகவும், கடந்த ஆண்டு வளர்ச்சி 5 சதவீதமாகக் காணப்பட்ட அதேவேளை, இந்த ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி 4.8 சதவீதமாக  இருந்ததாகவும் அந்த ஊடக சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அந்த வலுவான மீட்சியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சாதாரண நிலைக்குத் திரும்புதல் மாத்திரமே நிகழ்ந்துள்ளதாகவும், பொருளாதார நடவடிக்கைகளின் மட்டத்திற்கேற்ப, சில வளர்ச்சிகளின் தாக்கம் தற்காலிகமானது எனவும் அங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாகக் காணப்படுவதுடன், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உண்மையில் எதிர்பார்த்ததை விட வலுவான மீட்சியைக் காணக்கூடியதாக இருக்கும் எனவும், ஆசியாவின் பொருளாதாரம் குறித்து நடைபெற்ற அந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement