• Mar 14 2026

மட்டக்களப்பில் அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு உடனடி நடவடிக்கை - அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவிப்பு

Ziya / Nov 29th 2025, 11:18 am
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை மற்றும்  வெள்ளம் காரணமாக கிரான் பாலத்துக்கு மேலால் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதினால் கிரானுக்கும் புலிபாய்ந்த கல் பிரதேசத்திற்கும் இடையிலான போக்குவரத்து பாதை தடைப்பட்டுள்ளது. 

இதனால் கோராவெளி குடும்பபிமலை பெண்டுகள் சேனை முருக்கன் தீவு சாரா வெளி, திகிலிவெவட்டை பேரில்லா வெளி முறுத்தானை பூலக்காடு போன்ற கிராமத்து மக்களது அன்றாட இயல்பு வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பில்  அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்ங்கள்  இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அரச அதிகாரிகளுக்கான கூட்டமாகவும் உள்ளுராட்சிமன்ற தவிசாளர்கள்,முதல்வர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் என இரு கூட்டங்களாக இந்த அவசர கூட்டம் நடைபெற்றது.

அனர்த்தங்களுக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்களை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் அப்பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களில் உள்ள தங்குமிடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளை பணித்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் தரும் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுமக்களை செயற்படுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹெந்துநெத்தி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரத்னசேகர,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்,அனர்த்த முகாமைத்து பிரதி பணிப்பாதளர் ஷியாத்,கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தர உட்பட திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்,பாதுகாப்பு பிரதானிகள்,தவிசாளர்கள்,என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் மேலும் நிலைமைகள் ஏற்படும்போது எதிர்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இது தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் கலந்துகொண்ட ஊடக சந்திப்பும் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்து அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி,

நாங்கள் மகாவலி மற்றும் மல்வத்து ஓயா உட்பட உயர் பிரதேசங்களில் இருந்து வரும் வெள்ள நீர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருவதால் இந்த மக்களுக்கு ஏற்படும் தீமைகளைத் தடுப்பது  தொடர்பில் கலந்துரையாடினோம் என்றார்.

 சாதாரண நிலைமைகளை விட எதிர்வரும் தினங்களில் இன்னும் அதிகமான நீர் மட்டக்களப்பிற்குள் வரலாம் என்று. தற்போதும் இத்தனை மாதங்கள் ஒன்று சேரும் நீரின் அளவு ஒரே நாளில் மட்டக்களப்பிற்கு வந்துள்ளது. அந்தளவுக்கு உயர்பெறுமான நீர்மட்டம் மட்டக்களப்பு நகரை அண்டியும், பிரதேசங்கள் பலவற்றிலும் நிறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

725 குடும்பம்பங்களைச் சேர்ந்த 2178 பேர் தற்போது பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான உணவு உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை விட பல மடங்கு மக்கள் பாதிக்கப்படக் கூடும் என்ற நிலைப்பாடு அனர்த்த முகாமைத்துவக் குழுவினால் வெளிப்படுத்தப்படுகின்றன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றோம். இதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும், அனர்த்த முகாமைத்துவக் குழுவினரும், பொலிஸ், முப்படையினரும் மிகவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்றனர்.

விசேடமாக தற்போதைய நிலையில் எமக்கு பிரச்சனையாக உள்ளது குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது. குடிநீரை விநியோகிக்கும் பிரதான நிலையங்களுக்கான எரிபொருள் வசதி இல்லாவிட்டால் குறித்த நிலையங்களின் இயந்திரங்களைச் செயற்படுத்துவதற்கு முடியாமல் போகும். தற்போதும் இது பிரச்சனையாக உருவாகியுள்ளது. எரிபொருள் தேவையான அளவு பெற்றுக் கொடுத்து குடிநீர் வசதியை தொடர்ந்து பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.




மட்டக்களப்பில் அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு உடனடி நடவடிக்கை - அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை மற்றும்  வெள்ளம் காரணமாக கிரான் பாலத்துக்கு மேலால் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதினால் கிரானுக்கும் புலிபாய்ந்த கல் பிரதேசத்திற்கும் இடையிலான போக்குவரத்து பாதை தடைப்பட்டுள்ளது. இதனால் கோராவெளி குடும்பபிமலை பெண்டுகள் சேனை முருக்கன் தீவு சாரா வெளி, திகிலிவெவட்டை பேரில்லா வெளி முறுத்தானை பூலக்காடு போன்ற கிராமத்து மக்களது அன்றாட இயல்பு வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மட்டக்களப்பில்  அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்ங்கள்  இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.அரச அதிகாரிகளுக்கான கூட்டமாகவும் உள்ளுராட்சிமன்ற தவிசாளர்கள்,முதல்வர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் என இரு கூட்டங்களாக இந்த அவசர கூட்டம் நடைபெற்றது.அனர்த்தங்களுக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள மக்களை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் அப்பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களில் உள்ள தங்குமிடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளை பணித்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார்.அரச அதிகாரிகள் தரும் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுமக்களை செயற்படுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹெந்துநெத்தி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரத்னசேகர,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்,அனர்த்த முகாமைத்து பிரதி பணிப்பாதளர் ஷியாத்,கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தர உட்பட திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்,பாதுகாப்பு பிரதானிகள்,தவிசாளர்கள்,என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் மேலும் நிலைமைகள் ஏற்படும்போது எதிர்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.இது தொடர்பில் ஊடகங்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் கலந்துகொண்ட ஊடக சந்திப்பும் நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவித்து அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி,நாங்கள் மகாவலி மற்றும் மல்வத்து ஓயா உட்பட உயர் பிரதேசங்களில் இருந்து வரும் வெள்ள நீர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருவதால் இந்த மக்களுக்கு ஏற்படும் தீமைகளைத் தடுப்பது  தொடர்பில் கலந்துரையாடினோம் என்றார். சாதாரண நிலைமைகளை விட எதிர்வரும் தினங்களில் இன்னும் அதிகமான நீர் மட்டக்களப்பிற்குள் வரலாம் என்று. தற்போதும் இத்தனை மாதங்கள் ஒன்று சேரும் நீரின் அளவு ஒரே நாளில் மட்டக்களப்பிற்கு வந்துள்ளது. அந்தளவுக்கு உயர்பெறுமான நீர்மட்டம் மட்டக்களப்பு நகரை அண்டியும், பிரதேசங்கள் பலவற்றிலும் நிறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.725 குடும்பம்பங்களைச் சேர்ந்த 2178 பேர் தற்போது பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான உணவு உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை விட பல மடங்கு மக்கள் பாதிக்கப்படக் கூடும் என்ற நிலைப்பாடு அனர்த்த முகாமைத்துவக் குழுவினால் வெளிப்படுத்தப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றோம். இதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும், அனர்த்த முகாமைத்துவக் குழுவினரும், பொலிஸ், முப்படையினரும் மிகவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்றனர்.விசேடமாக தற்போதைய நிலையில் எமக்கு பிரச்சனையாக உள்ளது குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது. குடிநீரை விநியோகிக்கும் பிரதான நிலையங்களுக்கான எரிபொருள் வசதி இல்லாவிட்டால் குறித்த நிலையங்களின் இயந்திரங்களைச் செயற்படுத்துவதற்கு முடியாமல் போகும். தற்போதும் இது பிரச்சனையாக உருவாகியுள்ளது. எரிபொருள் தேவையான அளவு பெற்றுக் கொடுத்து குடிநீர் வசதியை தொடர்ந்து பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement