• Apr 20 2026

அமெரிக்காவின் உடனடி உதவிகள்; டிரம்புக்கு நன்றி தெரிவித்த அநுர!

Chithra / Dec 9th 2025, 6:47 pm
image

 

இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக, அமெரிக்கா 2 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 65 கோடி இலங்கை ரூபாய்க்கு மேல்) அவசர நிவாரண உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.


இந்த உதவியைப் பாராட்டி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு மீண்டும் ஒருமுறை இலங்கைக்கு ஆதரவாக நின்றமைக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.


அத்துடன், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்கா தனது இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களையும் அவசரமாகப் பணிக்கு அமர்த்தியுள்ளது.


இது குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகையில், "C-130J ரக விமானங்களை விரைவாக அனுப்பி வைத்தமையும், 2 மில்லியன் டொலர் அவசர உதவியை வழங்கியமையும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டுறவின் பலத்தைப் பிரதிபலிக்கிறது.


இந்தப் பங்காளிப்பு, நாம் பகிரும் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையேயான நெருங்கிய பிணைப்புகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது" என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் உடனடி உதவிகள்; டிரம்புக்கு நன்றி தெரிவித்த அநுர  இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக, அமெரிக்கா 2 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 65 கோடி இலங்கை ரூபாய்க்கு மேல்) அவசர நிவாரண உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.இந்த உதவியைப் பாராட்டி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு மீண்டும் ஒருமுறை இலங்கைக்கு ஆதரவாக நின்றமைக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.அத்துடன், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்கா தனது இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களையும் அவசரமாகப் பணிக்கு அமர்த்தியுள்ளது.இது குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகையில், "C-130J ரக விமானங்களை விரைவாக அனுப்பி வைத்தமையும், 2 மில்லியன் டொலர் அவசர உதவியை வழங்கியமையும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான கூட்டுறவின் பலத்தைப் பிரதிபலிக்கிறது.இந்தப் பங்காளிப்பு, நாம் பகிரும் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையேயான நெருங்கிய பிணைப்புகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது" என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement