• May 31 2026

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு கொள்முதல் செயல்முறை உடனடியாக ரத்து!

Chithra / May 31st 2026, 12:37 pm
image

சர்ச்சைக்குரிய இலத்திரனியல் கடவுச்சீட்டு திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


இத்தீர்மானம் தொடர்பில் தொடர்புடைய ஏலதாரர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் 2026 மே 29 அன்று மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்திற்கான கொள்முதல் செயல்முறையை உடனடியாக ரத்து செய்யுமாறு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த மின்னஞ்சலில் ஏலதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அஜித் பி. பெரேரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு கொள்முதல் செயல்முறை உடனடியாக ரத்து சர்ச்சைக்குரிய இலத்திரனியல் கடவுச்சீட்டு திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இத்தீர்மானம் தொடர்பில் தொடர்புடைய ஏலதாரர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் 2026 மே 29 அன்று மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கான கொள்முதல் செயல்முறையை உடனடியாக ரத்து செய்யுமாறு அமைச்சரவை பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த மின்னஞ்சலில் ஏலதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அஜித் பி. பெரேரா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement