• Nov 29 2024

தரமற்ற மருந்து இறக்குமதி – மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் சிஐடியில் முன்னிலை

CID
Chithra / Nov 28th 2024, 12:30 pm
image



தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்கள் குழுவொன்று இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர். 

முன்னாள் அமைச்சர்கள் நிமல் சிறிபால, பந்துல குணவர்தன, காஞ்சன விஜேசேகர ஆகியோரே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர். 

அவர்கள் இன்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதேவேளை முன்னாள் அமைச்சர்களான நளின் பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க, நசீர் அஹமட் மற்றும் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் நேற்று  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்தனர்.

இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கினர்.

தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 18 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்ய மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம அனுமதியளித்திருந்த நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

தரமற்ற மருந்து இறக்குமதி – மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் சிஐடியில் முன்னிலை தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்கள் குழுவொன்று இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் நிமல் சிறிபால, பந்துல குணவர்தன, காஞ்சன விஜேசேகர ஆகியோரே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர். அவர்கள் இன்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தனர்.இதேவேளை முன்னாள் அமைச்சர்களான நளின் பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க, நசீர் அஹமட் மற்றும் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் நேற்று  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்தனர்.இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கினர்.தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 18 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்ய மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம அனுமதியளித்திருந்த நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement