• Nov 19 2024

டலஸ் அழகப்பெரும தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்...!

Sharmi / May 13th 2024, 4:56 pm
image

இயலாமை உடைய நபர்கள் (மாற்றுத்திறனாளிகள்) எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இன்று(13) ஆரம்பமாகியுள்ளது.

இயலாமை உடைய நபர்கள் (மாற்றுத்திறனாளிகள்) எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வாக குறித்த அமர்வு இடம்பெறுகிறது.

 இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் ஆரம்பமானது.

மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இவ் அமர்வு இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் மதுரவிதாரண, பதில் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மனித உரிமைகள் அமைப்பு சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர கலந்து கொண்டனர்.


டலஸ் அழகப்பெரும தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல். இயலாமை உடைய நபர்கள் (மாற்றுத்திறனாளிகள்) எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில் இன்று(13) ஆரம்பமாகியுள்ளது.இயலாமை உடைய நபர்கள் (மாற்றுத்திறனாளிகள்) எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய தகவல்களைக் கலந்துரையாடுவதற்கான விசேட செயலமர்வாக குறித்த அமர்வு இடம்பெறுகிறது. இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் ஆரம்பமானது.மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இவ் அமர்வு இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் மதுரவிதாரண, பதில் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மனித உரிமைகள் அமைப்பு சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement