மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வின் முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் இன்று(29) மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பரந்தாமன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், திணைக்கள தலைவர்கள், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், இராணுவம், பொலிஸ் உயர் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலின் போது எதிர்வரும் 8 ஆம் திகதி, திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற உள்ள மகா சிவராத்திரி நிகழ்வு தொடர்பாகவும்,முன்னெடுக்கப்பட வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக போக்குவரத்து, சுகாதாரம், குடி நீர், உணவு , தங்குமிட ஏற்பாடுகள்,பாதுகாப்பு உள்ளடங்களாக முன்னெடுக்க வேண்டிய அவசிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வு தொடர்பில் முக்கிய கலந்துரையாடல். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வின் முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் இன்று(29) மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பரந்தாமன் தலைமையில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், திணைக்கள தலைவர்கள், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், இராணுவம், பொலிஸ் உயர் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.இக் கலந்துரையாடலின் போது எதிர்வரும் 8 ஆம் திகதி, திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற உள்ள மகா சிவராத்திரி நிகழ்வு தொடர்பாகவும்,முன்னெடுக்கப்பட வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.குறிப்பாக போக்குவரத்து, சுகாதாரம், குடி நீர், உணவு , தங்குமிட ஏற்பாடுகள்,பாதுகாப்பு உள்ளடங்களாக முன்னெடுக்க வேண்டிய அவசிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.