ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து வருவோர் வாக்காளர் அட்டையின்றி வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கமான பெஃப்ரல் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைக் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு இடம்பெறும் தினத்தன்று மதியம் நாடு திரும்பும் வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
தமது கடவுச்சீட்டை வாக்களிப்பு நிலையங்களில் காண்பித்து, குறித்த தினத்தில் நாடு திரும்பியதை உறுதிப்படுத்த முடியும்.
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பின் எவ்வித தடையுமின்றி வாக்களிக்க முடியும்.
எனவே, எவரும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியாது என எண்ண வேண்டாம் என நிறைவேற்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து வருவோர் வாக்காளர் அட்டையின்றி வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கமான பெஃப்ரல் தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைக் தெரிவித்துள்ளார்.வாக்களிப்பு இடம்பெறும் தினத்தன்று மதியம் நாடு திரும்பும் வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும்.தமது கடவுச்சீட்டை வாக்களிப்பு நிலையங்களில் காண்பித்து, குறித்த தினத்தில் நாடு திரும்பியதை உறுதிப்படுத்த முடியும்.வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பின் எவ்வித தடையுமின்றி வாக்களிக்க முடியும். எனவே, எவரும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியாது என எண்ண வேண்டாம் என நிறைவேற்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.