• Nov 25 2024

அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளின் வங்கி கணக்குகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!

Chithra / May 31st 2024, 8:43 am
image

 

அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளில் 1,25,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நிவாரணத் திட்டம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அறிவுறுத்தியுள்ளார்.

கிராமப்புறங்களில் உள்ள பலர் இதுபோன்று வங்கி கணக்குகளை திறக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில வாரங்களில் நிவாரணம் தொடர்பான பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி அடுத்த வாரத்திற்குப் பிறகு செயல்படுத்தப்படும் என்றும், 

நிவாரணப் பயன் பெறத் தகுதியான உண்மையான ஏழை மக்கள் தவறியிருந்தால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளின் வங்கி கணக்குகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு.  அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளில் 1,25,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்த நிவாரணத் திட்டம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அறிவுறுத்தியுள்ளார்.கிராமப்புறங்களில் உள்ள பலர் இதுபோன்று வங்கி கணக்குகளை திறக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த சில வாரங்களில் நிவாரணம் தொடர்பான பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி அடுத்த வாரத்திற்குப் பிறகு செயல்படுத்தப்படும் என்றும், நிவாரணப் பயன் பெறத் தகுதியான உண்மையான ஏழை மக்கள் தவறியிருந்தால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement