• Nov 22 2024

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு - இம்ரான் எம்.பி கோரிக்கை!

Tamil nila / Aug 7th 2024, 7:34 pm
image

ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்ட மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபில்யூ.ஜி.திசாநாயக்கவைக் கேட்டுள்ளார். 

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து கடந்த ஜுன் மாதம் விண்ணப்பம் கோரப்பட்டது. இதனடிப்படையில் சிலர் விண்ணப்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. எனினும் இதுவரை இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்படவோ அல்லது இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கான வேறு நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படவில்லை என மூதூர் கல்விச் சமுகம் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத் தாமதமானது சமுகங்களிடையே வீண் சந்தேகங்களைத் தோற்றுவிப்பதற்கு காரணமாக அமைவதால் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே இவ் வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடத்தை நிரப்ப விண்ணப்பம் கோரியிருப்பதாலும் இது வழமையான நிர்வாக நடைமுறை என்பதாலும் இதனை முன்னெடுப்பது தேர்தலுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

எனவே, பொருத்தமான ஒருவரை மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர்; கல்வி அமைச்சின் செயலாளரைக் கேட்டுள்ளார்.

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு - இம்ரான் எம்.பி கோரிக்கை ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்ட மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபில்யூ.ஜி.திசாநாயக்கவைக் கேட்டுள்ளார். மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து கடந்த ஜுன் மாதம் விண்ணப்பம் கோரப்பட்டது. இதனடிப்படையில் சிலர் விண்ணப்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. எனினும் இதுவரை இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்படவோ அல்லது இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கான வேறு நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படவில்லை என மூதூர் கல்விச் சமுகம் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத் தாமதமானது சமுகங்களிடையே வீண் சந்தேகங்களைத் தோற்றுவிப்பதற்கு காரணமாக அமைவதால் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே இவ் வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடத்தை நிரப்ப விண்ணப்பம் கோரியிருப்பதாலும் இது வழமையான நிர்வாக நடைமுறை என்பதாலும் இதனை முன்னெடுப்பது தேர்தலுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.எனவே, பொருத்தமான ஒருவரை மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர்; கல்வி அமைச்சின் செயலாளரைக் கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement