• May 23 2026

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கொடுப்பனவினை வழங்குமாறு இம்ரான் MP கோரிக்கை!

shanu / Dec 31st 2025, 1:29 pm
image

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் நீர் புகுந்து பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பன பாதிப்படைந்தன. இவ்வாறு பாடசாலை உபகரணங்கள் பாதிப்படைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதெற்கென உதவித் தொகையாக ரூபா 15,000 வழங்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. 


 இருந்தும் கிண்ணியாவில் பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று பலரும் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். கிராம சேவகர்களிடம் வினவினாள் மேலதிகாரிகள் தெளிவான அனுமதியோ, உத்தரவோ வழங்காமல் தம்மால் சில விடயங்களை சுயமாக செய்யமுடியாது எனக் கூறுகின்றனர்.


எனவே, புதிய கல்வி ஆண்டுக்கான பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் கிண்ணியா பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவினை  வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு கிராம சேவகர்களுக்கு தெளிவான அனுமதியினை வழங்குமாறு கிண்ணியா பிரதேச செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  கடிதத்தின்‌ பிரதி உரிய நடவடிக்கைக்காக  மாவட்ட செயலாளருக்கும் அனுப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கொடுப்பனவினை வழங்குமாறு இம்ரான் MP கோரிக்கை அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் நீர் புகுந்து பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பன பாதிப்படைந்தன. இவ்வாறு பாடசாலை உபகரணங்கள் பாதிப்படைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதெற்கென உதவித் தொகையாக ரூபா 15,000 வழங்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.  இருந்தும் கிண்ணியாவில் பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று பலரும் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். கிராம சேவகர்களிடம் வினவினாள் மேலதிகாரிகள் தெளிவான அனுமதியோ, உத்தரவோ வழங்காமல் தம்மால் சில விடயங்களை சுயமாக செய்யமுடியாது எனக் கூறுகின்றனர்.எனவே, புதிய கல்வி ஆண்டுக்கான பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் கிண்ணியா பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவினை  வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு கிராம சேவகர்களுக்கு தெளிவான அனுமதியினை வழங்குமாறு கிண்ணியா பிரதேச செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  கடிதத்தின்‌ பிரதி உரிய நடவடிக்கைக்காக  மாவட்ட செயலாளருக்கும் அனுப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement