யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தின் ஒருங்கிணைப்பில் "குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி" எனும் கருப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நினைவுகூரும் முகமாக இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடையில் ஈடுபட்டனர். தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் என அனைவரும் இனம், மதம், மொழி பேதங்களை கடந்து இந்த இரத்ததான முகாமில் ஈடுபட்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தின் ஒருங்கிணைப்பில் "குருதியால் தோய்ந்த நம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி" எனும் கருப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நினைவுகூரும் முகமாக இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு குருதிக்கொடையில் ஈடுபட்டனர். தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் என அனைவரும் இனம், மதம், மொழி பேதங்களை கடந்து இந்த இரத்ததான முகாமில் ஈடுபட்டனர்.