• Apr 11 2026

இந்தியாவில் கரைஒதுங்கிய காணாமல்போன யாழ்.மீனவர்கள் - காவல் படையினரால் கைது

Chithra / Mar 5th 2026, 12:30 pm
image

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். 


குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,


கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து இந்திய கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருந்தது. 


இதனை அவதானித்த இந்திய மீனவர்கள் குறித்த படகினை தமது விசைப் படகால் இழுத்துச் சென்று  மீனவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கை கடல் எல்லையில் விட்டு விட்டு சென்றனர். 


பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு  மீண்டும் இந்திய கடல் எல்லைக்கால் சென்ற நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஏழாவது நாள் தமிழ்நாட்டின் வடக்கு கரையில் மீட்கப்பட்டுள்ளது.


இந் நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் இவர்கள்  கைது செய்யப்பட்டனர். 

இந்தியாவில் கரைஒதுங்கிய காணாமல்போன யாழ்.மீனவர்கள் - காவல் படையினரால் கைது யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து இந்திய கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருந்தது. இதனை அவதானித்த இந்திய மீனவர்கள் குறித்த படகினை தமது விசைப் படகால் இழுத்துச் சென்று  மீனவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கை கடல் எல்லையில் விட்டு விட்டு சென்றனர். பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு  மீண்டும் இந்திய கடல் எல்லைக்கால் சென்ற நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஏழாவது நாள் தமிழ்நாட்டின் வடக்கு கரையில் மீட்கப்பட்டுள்ளது.இந் நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் இவர்கள்  கைது செய்யப்பட்டனர். 

Advertisement

Advertisement

Advertisement