• Oct 18 2024

இலங்கையில் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனைகள் முடக்கம்!

Chithra / Oct 18th 2024, 10:52 am
image

Advertisement

 

அரசாங்க வைத்தியசாலையில் காணப்படுகின்ற மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையால் இலங்கையில் 8க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனை சேவைகள் தடைப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தில் துணை மருத்துவ சேவைக்கு தேவையான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக CT ஸ்கேனர் மற்றும் MRI ஸ்கேனர் உள்ளிட்ட பல பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சானக தர்மவிக்ரம சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிகளவில் பணிச் சுமையை சுமக்க வேண்டியுள்ளதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, இந்த சேவைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இல்லாவிட்டால், அடுத்த சில மாதங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார சேவை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


இலங்கையில் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனைகள் முடக்கம்  அரசாங்க வைத்தியசாலையில் காணப்படுகின்ற மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையால் இலங்கையில் 8க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனை சேவைகள் தடைப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த அரசாங்கத்தில் துணை மருத்துவ சேவைக்கு தேவையான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக CT ஸ்கேனர் மற்றும் MRI ஸ்கேனர் உள்ளிட்ட பல பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சானக தர்மவிக்ரம சுட்டிக்காட்டினார்.அதேநேரம், தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிகளவில் பணிச் சுமையை சுமக்க வேண்டியுள்ளதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.எனவே, இந்த சேவைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இல்லாவிட்டால், அடுத்த சில மாதங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார சேவை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Advertisement

Advertisement

Advertisement