இலங்கையில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 80 சதவீதமானவை தொற்றா நோய்களினால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள் முக்கிய இடத்தைப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சை வளாகத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய இரு நோய்களும் ஒருவருக்கு ஒரே நேரத்தில் காணப்படும்போது, உடலில் பல்வேறு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மிக மோசமான மற்றும் முக்கியமான விளைவுகளில் ஒன்றாக மாரடைப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் மட்டுமே தமது நோயை உரிய முறையில் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நீரிழிவு நோயாளிகளில் சுமார் 25 சதவீதமானவர்கள் மட்டுமே நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நாட்டில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப சுகாதாரக் கட்டமைப்பை மறுசீரமைத்து மேம்படுத்த வேண்டியது அவசியம் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் 80 சதவீதமான மரணங்களுக்கு தொற்றா நோய்களே காரணம் வைத்திய நிபுணர் தகவல் இலங்கையில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 80 சதவீதமானவை தொற்றா நோய்களினால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள் முக்கிய இடத்தைப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சை வளாகத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய இரு நோய்களும் ஒருவருக்கு ஒரே நேரத்தில் காணப்படும்போது, உடலில் பல்வேறு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன் மிக மோசமான மற்றும் முக்கியமான விளைவுகளில் ஒன்றாக மாரடைப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் மட்டுமே தமது நோயை உரிய முறையில் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, நீரிழிவு நோயாளிகளில் சுமார் 25 சதவீதமானவர்கள் மட்டுமே நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனவே, நாட்டில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப சுகாதாரக் கட்டமைப்பை மறுசீரமைத்து மேம்படுத்த வேண்டியது அவசியம் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க வலியுறுத்தியுள்ளார்.