• Dec 27 2024

கடந்த 24 மணிநேரத்தில் 8,747 சாரதிகள் கைது

Chithra / Dec 25th 2024, 2:50 pm
image


கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட வீதி விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8,747 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. 

அதன்படி, குறித்த காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். 

அதேநேரம், கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகள் எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, எதிர்வரும் காலங்களில் மிகவும் அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்தி, வீதி விபத்துக்களைத் தவிர்க்குமாறு காவல்துறை ஊடகப்பேச்சாளர் சாரதிகளைக் கோரியுள்ளார். 

பிரதி காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கமைய, விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் அமுல்படுத்தப்படும் விசேட வாகன சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.


கடந்த 24 மணிநேரத்தில் 8,747 சாரதிகள் கைது கடந்த 24 மணிநேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட வீதி விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 8,747 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, குறித்த காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அதேநேரம், கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகள் எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, எதிர்வரும் காலங்களில் மிகவும் அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்தி, வீதி விபத்துக்களைத் தவிர்க்குமாறு காவல்துறை ஊடகப்பேச்சாளர் சாரதிகளைக் கோரியுள்ளார். பிரதி காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கமைய, விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் அமுல்படுத்தப்படும் விசேட வாகன சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement