• Nov 28 2024

புத்தாண்டில் புத்திசாதூரியத்துடன் செயற்பட வேண்டும்! கரு ஜயசூரிய

Chithra / Jan 1st 2024, 11:54 am
image

 

இலங்கையர்களாகிய எமக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், பாரிய சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டியதுமான புதிய ஆண்டு மலர்ந்துள்ளது  என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இச்சவால்களை வெற்றிக் கொள்வதற்கு கடந்த கால தவறுகளை சரி செய்து கொண்டு, பிரச்சினைகளையும் சிக்கல்களையும் கண்டு உணர்ச்சிவசப்படாமல் புத்திசாதூரியத்துடன் செயற்பட வேண்டும் என்ற உறுதியை நாம் மனதில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

பிறந்திருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான வாழ்த்து செய்தியிலேயே இதனை கூறியுள்ளார்.

மேலும், 2024 ஆவது வருடம் தேர்தல் வருடமாக அமைகின்றமையால் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது அரசியல் பாகுபாடு இன்றி மரியாதைக்குரியவர்களை தெரிவு செய்வதற்கு அறிவார்ந்த மக்கள் நடவடிக்கைச் செய்ய வேண்டும்.

தனித்திருந்து சவால்களை வெற்றிக்கொள்ள முடியாது என்பதை கடந்த வருடங்கள் நமக்கு உணர்த்தியுள்ளது. இந்த சமூகத்தில் வாழ்வது நான், நீ, நாம் எனும் பிம்பங்களே. 

பரஸ்பர மரியாதையுடன் மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயற்படுவதின் ஊடாக சுபிட்சமான தேசத்தை கட்டமைக்க முடியும் என்பது எமது நம்பிக்கையாகும். இந்த சந்தர்ப்பத்தில் சமூகத்தில் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆகையால் மற்றவருக்கு அதிர்ச்சியை விளைவிக்கும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட கூடாது. ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக செயற்பட வேண்டும். 

சரியான கொள்கைகளுக்காகவும் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

கடந்த ஆண்டில் போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறைகளில் ஏற்பட்ட வேலை நிறுத்தங்களின் காரணமாக அப்பாவி மக்கள் நெருக்கடிக்கு உள்ளான விதத்தை நாம் கண்டோம்.

ஆகையால் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதத்தில் திடீரென மேற்கொள்ளும் அநீதியான வேலை நிறுத்த போராட்டங்கள் போன்ற விடையங்களின் போது நடுநிலையாக சிந்தித்து, மலரவிருக்கும் புதிய வருடத்தில் சரியான சிந்தனையுடன் செயல்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு, சக மனிதனை சமமாக கருதும், சமூக நீதி மலரும் வகையில் படிப்படியாக இலங்கை தேசத்தை கட்டி எழுப்பும், மக்கள் மீது சுமத்தப்பட்ட பொருளாதார மற்றும் மன அழுத்தங்கள் இல்லாதொழியும் புதிய வருடமாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இலங்கையர் மற்றும் உலகெங்கும் வாழும் அனைவரினதும் நேர்மைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் புது வருடமாக அமைய பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டில் புத்திசாதூரியத்துடன் செயற்பட வேண்டும் கரு ஜயசூரிய  இலங்கையர்களாகிய எமக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், பாரிய சவால்களை வெற்றிக்கொள்ள வேண்டியதுமான புதிய ஆண்டு மலர்ந்துள்ளது  என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.இச்சவால்களை வெற்றிக் கொள்வதற்கு கடந்த கால தவறுகளை சரி செய்து கொண்டு, பிரச்சினைகளையும் சிக்கல்களையும் கண்டு உணர்ச்சிவசப்படாமல் புத்திசாதூரியத்துடன் செயற்பட வேண்டும் என்ற உறுதியை நாம் மனதில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.பிறந்திருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான வாழ்த்து செய்தியிலேயே இதனை கூறியுள்ளார்.மேலும், 2024 ஆவது வருடம் தேர்தல் வருடமாக அமைகின்றமையால் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது அரசியல் பாகுபாடு இன்றி மரியாதைக்குரியவர்களை தெரிவு செய்வதற்கு அறிவார்ந்த மக்கள் நடவடிக்கைச் செய்ய வேண்டும்.தனித்திருந்து சவால்களை வெற்றிக்கொள்ள முடியாது என்பதை கடந்த வருடங்கள் நமக்கு உணர்த்தியுள்ளது. இந்த சமூகத்தில் வாழ்வது நான், நீ, நாம் எனும் பிம்பங்களே. பரஸ்பர மரியாதையுடன் மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயற்படுவதின் ஊடாக சுபிட்சமான தேசத்தை கட்டமைக்க முடியும் என்பது எமது நம்பிக்கையாகும். இந்த சந்தர்ப்பத்தில் சமூகத்தில் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆகையால் மற்றவருக்கு அதிர்ச்சியை விளைவிக்கும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட கூடாது. ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக செயற்பட வேண்டும். சரியான கொள்கைகளுக்காகவும் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.கடந்த ஆண்டில் போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறைகளில் ஏற்பட்ட வேலை நிறுத்தங்களின் காரணமாக அப்பாவி மக்கள் நெருக்கடிக்கு உள்ளான விதத்தை நாம் கண்டோம்.ஆகையால் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதத்தில் திடீரென மேற்கொள்ளும் அநீதியான வேலை நிறுத்த போராட்டங்கள் போன்ற விடையங்களின் போது நடுநிலையாக சிந்தித்து, மலரவிருக்கும் புதிய வருடத்தில் சரியான சிந்தனையுடன் செயல்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு, சக மனிதனை சமமாக கருதும், சமூக நீதி மலரும் வகையில் படிப்படியாக இலங்கை தேசத்தை கட்டி எழுப்பும், மக்கள் மீது சுமத்தப்பட்ட பொருளாதார மற்றும் மன அழுத்தங்கள் இல்லாதொழியும் புதிய வருடமாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இலங்கையர் மற்றும் உலகெங்கும் வாழும் அனைவரினதும் நேர்மைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் புது வருடமாக அமைய பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement