• Mar 05 2026

தீடீரென ஒன்றுகூடிய ரணில், நாமல் உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் - கொழும்பில் பரபரப்பாகும் அரசியல் களம்

Chithra / Oct 3rd 2025, 3:19 pm
image


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொழும்பில் உள்ள தனியார் விருந்தகத்தில் நேற்று இரவு எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பும் இரவு விருந்துபசாரமும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் அழைப்பின் பேரில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை இந்தக் கூட்டத்தில் விளக்கியுள்ளனர். 

கூட்டு எதிர்க்கட்சியின் தலைமையில் கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

மேலும் எதிர்காலத்தில் எதிர்க்கட்சியாக இணைந்து எடுக்க வேண்டிய பல முக்கிய நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு முன்வைத்த திட்டங்களை அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீடீரென ஒன்றுகூடிய ரணில், நாமல் உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் - கொழும்பில் பரபரப்பாகும் அரசியல் களம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் உள்ள தனியார் விருந்தகத்தில் நேற்று இரவு எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பும் இரவு விருந்துபசாரமும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் அழைப்பின் பேரில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை இந்தக் கூட்டத்தில் விளக்கியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியின் தலைமையில் கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.மேலும் எதிர்காலத்தில் எதிர்க்கட்சியாக இணைந்து எடுக்க வேண்டிய பல முக்கிய நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு முன்வைத்த திட்டங்களை அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement