• May 12 2024

அமெரிக்காவில், வனத்துறை முன்னெடுக்கவுள்ள ஈவிரக்கமற்ற செயல்! SamugamMedia

Tamil nila / Feb 18th 2023, 3:29 pm
image

Advertisement

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் வாழ்விடங்களை சேதப்படுத்தும் மற்றும் மலையேறுபவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் கால்நடைகளை ஹெலிகொப்டர் கொண்டு சுட்டுக்கொல்ல அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


இந்த தகவலை அமெரிக்க வனத்துறை உறுதி செய்துள்ளது. அதன்படி வியாழக்கிழமை தொடங்கி மொத்தம் நான்கு நாட்கள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.கைவிடப்பட்ட நிலையில் உள்ள மொத்தம் 150 பசுக்களை இவ்வாறு கொல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


இந்த முடிவுக்கு பண்ணை உரிமையாளர்கள் தரப்பில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.இது கொடூரத்தின் உச்சம் என குறிப்பிட்டுள்ள பண்ணை உரிமையாளர்கள், இவ்வாறான கால்நடைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இது முறையற்ற வழி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.



அதேவேளை பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையானது வனவிலங்குகளின் வாழ்விடங்களையும் பொதுமக்களையும் பாதுகாக்க மிகவும் மனிதாபிமான வழி என வன மேற்பார்வையாளர் காமில் ஹோவ்ஸ் தெரிவித்துள்ளார்.


பொதுவாக அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் அலைந்து திரியும் ஓநாய் வகைகளை ஹெலிகொப்டர் கொண்டு சுட்டுக்கொல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.


இந்நிலையில் வனப்பகுதிகளில் வாழும் பசுமாடுகளை சுட்டுக் கொல்வது கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. அத்துடன் ஹெலிகொப்டர் கொண்டு சுடுவதால், கால்நடைகள் உயிர் பயத்தில் ஓட்டமெடுக்கும், இதனால் பலமுறை சுட வேண்டிய நிலை ஏற்படும், காயம்படும் கால்நடைகள் இறக்க சில மணி நேரங்களில் இருந்து சில நாட்கள் கூட ஆகலாம் என பண்ணை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


அது மட்டுமின்றி, பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகள் கூட வேலியை உடைத்துக்கொண்டு வெளியேறி இருக்கலாம், அவைகளும் துப்பாக்கி குண்டுக்கு இலக்காகும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

அமெரிக்காவில், வனத்துறை முன்னெடுக்கவுள்ள ஈவிரக்கமற்ற செயல் SamugamMedia அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் வாழ்விடங்களை சேதப்படுத்தும் மற்றும் மலையேறுபவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் கால்நடைகளை ஹெலிகொப்டர் கொண்டு சுட்டுக்கொல்ல அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஇந்த தகவலை அமெரிக்க வனத்துறை உறுதி செய்துள்ளது. அதன்படி வியாழக்கிழமை தொடங்கி மொத்தம் நான்கு நாட்கள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.கைவிடப்பட்ட நிலையில் உள்ள மொத்தம் 150 பசுக்களை இவ்வாறு கொல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இந்த முடிவுக்கு பண்ணை உரிமையாளர்கள் தரப்பில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.இது கொடூரத்தின் உச்சம் என குறிப்பிட்டுள்ள பண்ணை உரிமையாளர்கள், இவ்வாறான கால்நடைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இது முறையற்ற வழி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.அதேவேளை பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையானது வனவிலங்குகளின் வாழ்விடங்களையும் பொதுமக்களையும் பாதுகாக்க மிகவும் மனிதாபிமான வழி என வன மேற்பார்வையாளர் காமில் ஹோவ்ஸ் தெரிவித்துள்ளார்.பொதுவாக அமெரிக்காவின் மேற்கு பகுதிகளில் அலைந்து திரியும் ஓநாய் வகைகளை ஹெலிகொப்டர் கொண்டு சுட்டுக்கொல்வது வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்நிலையில் வனப்பகுதிகளில் வாழும் பசுமாடுகளை சுட்டுக் கொல்வது கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. அத்துடன் ஹெலிகொப்டர் கொண்டு சுடுவதால், கால்நடைகள் உயிர் பயத்தில் ஓட்டமெடுக்கும், இதனால் பலமுறை சுட வேண்டிய நிலை ஏற்படும், காயம்படும் கால்நடைகள் இறக்க சில மணி நேரங்களில் இருந்து சில நாட்கள் கூட ஆகலாம் என பண்ணை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.அது மட்டுமின்றி, பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகள் கூட வேலியை உடைத்துக்கொண்டு வெளியேறி இருக்கலாம், அவைகளும் துப்பாக்கி குண்டுக்கு இலக்காகும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement